உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமே இதயத்தின் ஆரோக்கியத்தை குறிக்கிறது. இதயம் நல்ல முறையில் இயங்குகிறதா என்பதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. நல்ல நிலையில் இயங்கும் ஆரோக்கியமான இதயத்தின் ஆறு அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. இதயத் துடிப்பு: ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 பீட்கள் என்பது ஆரோக்கியமான இதயத் துடிப்பாகக் கருதப்படுகிறது. ஓய்வில் இருப்பவருக்கு இதுதான் அளவு. ஒருவேளை வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்பவர் என்றால் அது 40க்கும் குறைவாக இருந்தால் அது நல்லது. இதயத்துடிப்பு இந்த ரேஞ்சில் இருந்தாலே இதயத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதன் அறிகுறியாகும்.
2. சுவாசம்: சிறிய உடல் உழைப்பிற்குப் பின்னர் அதிகமாக மூச்சு வாங்கினால் அது இதயத்தில் பிரச்னை இருப்பதற்கான அறிகுறியாகும். அமைதியாக ஒருவர் மூச்சு விடுவதுதான் சரியான மூச்சு விடும் முறை. மூச்சுத் திணறல் வராமல் இருப்பதும் மற்றும் தினசரி வேலைகள் செய்யும்போது மூச்சு வாங்காமல் இருப்பதும் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள்படும்.
3. இரத்த அழுத்தம்: ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவுகள் என்பது 120/80 எம்எம்ஹெச்ஜி என்ற அளவில் இருக்க வேண்டும். உங்கள் இரத்த அழுத்தம் 130/80 என்று இருந்தால் அல்லது அதைவிட அதிகமாக இருந்தால், உங்களுக்கு இரத்த அழுத்தம் உள்ளது என்று பொருள். இது உங்கள் இதயத்துக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அறிகுறிகள் ஆகும்.
4. ஆற்றல் அளவுகள்: நாள் முழுவதும் சக்தி வாய்ந்தவராக உணர்வது ஆரோக்கியமான இதயத்தின் அறிகுறியாகும். அடிக்கடி இதயம் சோர்வடைந்தாலோ, மயக்கம் வந்தாலோ உங்கள் இதயத்தால் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியவில்லை என்று பொருள்படும். இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கவில்லை என்பதை அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
5. கொழுப்பு அளவுகள்: இதயத்தின் ஆரோக்கியத்தை சரியான அளவில் பராமரிப்பது என்பது ஆரோக்கியமான கொழுப்பு அளவுகளைப் பொறுத்தது. எனினும், உங்களுக்கு அதிக கொழுப்பு இருந்தால், அது உங்கள் தமனிகளில் பிளாக்குகள் உருவாகக் காரணமாகி, இரத்த ஓட்டம் தடைபடும். இதற்கு உங்கள் இதயம் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தில் உள்ளது என்று பொருள்.
6. பற்களின் ஆரோக்கியம்: பற்கள் ஆரோக்கியமாக இருந்தால், இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள். ஆனால், அடிக்கடி ஈறுகளில் பிரச்னைகள் அல்லது தொற்றுகள் ஏற்பட்டால், இதய நோய்கள் வரும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளது என்று பொருள். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் எளிதாக இரத்தத்தில் கலந்துவிடும் என்பதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய ஆறு அறிகுறிகளும் அற்புதமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.