44 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சினேகா.. ரகசியத்தை உடைத்த புன்னகை அரசி!

actress-sneha-fitness-secrets
actress-sneha-fitness-secrets
Published on

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை சினேகாவுக்கு இப்போது 44 வயது ஆகிறது. ஆனால் இப்போதும் அவர் பார்ப்பதற்கு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளம் நாயகியைப் போலவே ரொம்பவே ஃபிட்டாக காட்சியளிக்கிறார். அவர் கடைபிடிக்கும் அந்த ஸ்பெஷலான டயட் மற்றும் ஒர்க்அவுட் முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மாறிப்போன ஒர்க்அவுட் ஸ்டைல்!

ஆரம்ப காலத்தில் உடல் எடையை குறைப்பதற்காக யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் தீவிரமான கார்டியோ பயிற்சிகளை சினேகா செய்து வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது உடல் அந்த பயிற்சிகளுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அதனால் அவர் முழுமையாக பளு தூக்கும் பயிற்சிகளில் அதாவது வெயிட் ட்ரெய்னிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஜிம் ஒர்க்அவுட் முறை அவருக்கு ரொம்பவே செட் ஆகியுள்ளதுடன், உடலுக்கு ஒரு மிகப்பெரிய வலிமையையும் கொடுத்துள்ளதாக அவர் ரொம்பவே சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான டயட்!

எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர் தனக்குப் பிடித்த உணவுகளை எல்லாம் தியாகம் செய்வது கிடையாது. எல்லாமே சாப்பிடுவார், ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி உணவு எடுக்கிறோம் என்பதில் ரொம்பவே கறாராக இருப்பார். இதற்கு மேக்ரோ கவுண்டிங் என்று பெயர். அவரது உணவில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். 

பெரும்பாலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு கிரில் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக உணவில் அதிக மசாலா மற்றும் உப்பை தவிர்த்துவிட்டு ரொம்பவே சுத்தமான உணவை சாப்பிடுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். கூடவே நிறைய தண்ணீர் குடிப்பதும் அவரது பளபளப்பான சருமத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரைக்கு மாற்றா? பனங்கற்கண்டின் அறியப்படாத பக்கங்கள்!
actress-sneha-fitness-secrets

சர்க்கரைக்கு நோ!

சினேகாவின் இந்த பிட்னஸ் பயணத்தில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை என்றால் அது சர்க்கரையை முழுமையாக தவிர்த்தது தான். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அவர் இனிப்புகளை ருசிப்பார். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் இனிப்பு கலந்த தின்பண்டங்களை தவிர்ப்பது உடல் எடை குறைப்பில் மிகப்பெரிய அற்புதத்தை செய்யும். 

சர்க்கரை என்பது எந்த ஒரு சத்தும் இல்லாத வெறும் வெற்று கலோரி மட்டுமே. இதை தவிர்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு இருநூறு முதல் ஐநூறு கலோரிகள் வரை உடலில் சேர்வதை நம்மால் தடுக்க முடியும். இதன் விளைவாக ஒரு வாரத்தில் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை ஈஸியாக எடையை குறைக்கலாம். இனிப்பை குறைப்பதால் இன்சுலின் அளவு சீராகி தேவையற்ற பசி எடுப்பதும் தானாகவே குறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உடல் முழுவதும் வியர்க்குருவால் அவதியா? தீர்வுகள் இதோ...
actress-sneha-fitness-secrets

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெறும் சர்க்கரையை மட்டும் நிறுத்தினால் போதாது. சினேகாவை போல முறையான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத ஒரு வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். மசாலா, உப்பு மற்றும் எண்ணெய் குறைவான உணவுகளை சாப்பிடும்போது வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வராது. 

எந்த ஒரு கடுமையான டயட்டையும் பின்பற்றாமல், தங்களுக்கு பிடித்தமான உணவுகளை அளவோடு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தாலே போதும் நாமும் சினேகாவைப் போல எப்போதுமே ரொம்பவே இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com