எப்போதும் சோர்வு, தலைசுற்றலா? இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து உணவுகள்!

ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி இரத்த சோகையைத் தடுக்கும் உணவு முறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறார் பொதுநல மருத்துவர் பிரகதீஷ் MBBS
Anemia - இரத்த சோகை
Anemia - இரத்த சோகை
மகாலட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

சிறுவயது முதலே சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டோ, அல்லது உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதினாலோ இரத்த சோகை வரலாம். இரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் குறைவினால் ஏற்படுவது.

ஹீமோகுளோபின், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் இரும்பு சத்து நிறைந்த புரதம் ஆகும். ஒருவரின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது.

ஹீமோகுளோபின் அளவானது ஆண்களுக்கு 14-18 கி/டெலி இருக்க வேண்டும். பெண்களுக்கு 12-16 கி/டெலி இருக்க வேண்டும். இதன் அளவு குறைவாக இருந்தால் உடல் ஆரோக்கியம் பலவகைகளில் பாதிக்கப்படும். அவ்வாறு குறையும் போது நம் உடலில் அதற்கான அறிகுறிகள் தென்படும்.

ரத்த சோகைக்கான அறிகுறிகள்:

இதய துடிப்பு திடீரென அதிகரிப்பது, குறைவது என அதன் துடிப்பு வேகத்தில் மாற்றம் உண்டாகும். ஏனெனில் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்லாத தன் காரணமாக இதயம் அதை ஈடு செய்யும் வகையில் துடிப்பை அதிகரித்து குறைக்கும். அதன் வெளிப்பாடே இந்த அறிகுறி.

Anemia - இரத்த சோகை
Anemia - இரத்த சோகை

ரத்தம் இல்லையென்றால் சருமம் வெளிறி போய் காணப்படும். அதோடு கண்கள், நகங்கள், மற்றும் பற்களின் ஈறுகள் ரத்தமின்றி வெளிறி போய் இருக்கும்.

இரும்பு சத்து இல்லையென்றால் தசைகளில் சுருக்கம் ஏற்பட்டு பலவீனமடையும். இதனால் கை, கால்கள் பலவீனமாக இருக்கும். ஹீமோகுளோபின் சீராக இல்லாததால் தலைவலி, மூச்சடைப்பு, மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

இதனால் உற்சாகமின்மை எதிலும் ஆர்வமின்மை எந்த வேலையும் செய்ய முடியாமல் எப்போதுமே தூக்க உணர்வோடு இருப்பது போன்றவை ஏற்படும்.

ரத்த சோகையை இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் B12 போன்ற வைட்டமின்கள் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நெய், தேங்காய் எண்ணெயால் கெட்ட கொழுப்பு அதிகரிக்குமா? ICMR ஆய்வு தகவல்!
Anemia - இரத்த சோகை

கீரை வகைகள், பீட்ரூட், ஆட்டிறைச்சி, ஈரல், வேர்க்கடலை, கருப்பு கொண்டைக்கடலை, முட்டை, மாதுளை, நட்ஸ் வகைகள், கடல் சார் உணவுகள், பேரீட்சை போன்ற உணவுகளை உட்கொண்டால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம். சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லிக் காய், முலாம்பழம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். பால், டீ குடிப்பதை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பும், பின்பும் தவிர்க்க வேண்டும்.

உணவு முறையில் மாற்றம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளுதல், 6 மாதத்திக்கொரு முறை குடற்புழு மாத்திரை உட்கொள்ளுதல், அடிக்கடி சோப் போட்டு கை கழுவுதல் வெளியில் செல்லும் போது செருப்பு அணிந்து செல்வது ஆகியவற்றால் இதனை தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பிரசவத்திற்குப் பின் பெண்களின் மூளையில் நடக்கும் மேட்ரெசென்ஸ் மாற்றம்!
Anemia - இரத்த சோகை

ரத்தசோகை வராமல் தடுக்க நல்ல ஆரோக்கியமான உணவு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ரத்த சோகை சார்ந்த தீவிர பிரச்சனைக்கு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இவை யாவும் என் மகன் பொதுநல மருத்துவர் பிரகதீஷ் MBBS சொன்னதை தொகுத்து எழுதியுள்ளேன்.

logo
Kalki Online
kalkionline.com