
* இரவு தூங்குவதற்கு முன் கிராம்பு நீர் அருந்துவதால் நல்ல செரிமானம் ஏற்படும். குடலின் கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* கிராம்பில் உள்ள யூஜினால் என்ற பொருள் தொற்றுக்களை நீக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
* இருமல் மற்றும் ஐலதோஷத்தை தடுக்கும். சுவாச ஆரோக்கியம் மேம்படும்.
* கிராம்பு நீர் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். நீரிழிவுக்கு நல்லது.
* இதில் அழற்சி எதிர்ப்பு பண்பு இருப்பதால் மூட்டுவலி தசைகளின் வலிகளைப் போக்கும்.
* உடல் நச்சுக்களை நீக்கிக் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும்.
* இது மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதால் கொழுப்பை நீக்கி உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.
* இதில் ஆன்டி பாக்டீரியல் பண்பு உள்ளதால் வாய் துர்நாற்றம் நீங்கி வாயை ஆரோக்கியமாக வைக்கும்.
* இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் ஃப்ரீ ராடிகல்களின் அழுத்தத்தை போக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். இளமையை தக்கவைக்கும்.
* நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தைக் போக்கி நல்ல புத்துணர்வு தரும்.
* பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் பருக்களை தடுத்து சருமத்தைப் பொலிவாக வைக்கும்.
* சுவாசப் பிரச்சனையைப் போக்கும்.
* தலைவலியைப் போக்கி பதட்டத்தைக் குறைக்கும்.
* இரவு நல்ல தூக்கத்தைத் கொடுக்கும்.
தயாரிப்பு
நான்கு அல்லது ஐந்து கிராம்பை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பான இருக்கும் போது அருந்த வேண்டும்.
2. புதினா-பெருஞ்சீரகம் கலந்த நீரின் நன்மைகள் :
* இந்த தண்ணீர் நல்ல செரிமான சக்தி, நச்சுக்களை நீக்குகிறது மற்றும் அழற்சியை போக்குகிறது.
* புதினா வயிற்றை நன்கு செரிமான நிலையில் வைக்கும். பெருஞ்சீரகம் வயிறு வீக்கத்தைக் போக்கும்.
* கல்லீரல் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
* இது பசியைக் கட்டுப்படுத்தி மேலும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வைத் தடுத்து மெட்டபாலிசத்தை நன்கு ஊக்குவிக்கிறது.
* எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்தது.
* பெருஞ்சீரகத்தில் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளதால் வாய்தொற்றை நீக்கி துர்நாற்றத்தைப் போக்குகிறது. ஈறுகளையும் பாதுகாக்கிறது.
* ஆராய்ச்சியின் படி பெருஞ்சீரகம் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. புதினா மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை போக்குகிறது.
3.இந்த கடும் கோடையில் சன் ஸ்ட்ரோக்கைத் தடுக்க உட்கொள்ள வேண்டியவை :
சப்ஜா விதைகள் :
குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த விதைகளை நீரில் ஊறவைக்க ஆன்டி ஆக்சிடென்ட்கள் வெளிப்பட்டு உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் உடலை நீரேற்றமாக வைக்கிறது. இதோடு எலுமிச்சை ஜூசும் சேர்த்து உட்கொள்வது சிறந்தது.
வெந்தயம் :
வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் உட்கொள்வதால் அழற்சி நீங்கி செரிமானமும் மேம்படும்.
பெருஞ்சீரகம் :
இது இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை படைத்தது. இரவு ஊற வைத்த பெருஞ்சீரக தண்ணீர் உட்கொள்வதால் உடல் சூடு நீங்கி சன் ஸ்ட்ரோக்கைத் தடுக்கும்.
கொத்தமல்லி விதை :
இதை தண்ணீரில் கொதிக்க வைத்து உட்கொள்ள உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
கோண்ட் கதிரா :
தண்ணீரில் ஊறவைக்க ஜெல் போன்று ஆகும். இது மிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. இதை பால் மற்றும் ரோஸ் வாட்டர் உடன் சேர்த்து உட்கொள்ள உடல் குளுமை பெறும்.
சியா விதைகள் :
ஆன்டி ஆக்சிடென்ட்டும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் நிறைந்த இது, நீரில் எலுமிச்சை ஜுஸ் மற்றும் தேன் சேர்த்துக் கலந்து உட்கொள்ள மிக சிறந்த கோடைப் பானமாகும். ஊறவைக்க ஜெல் போன்று ஆகும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.