கேரட் ஒரு சத்தான உணவு என்பது நாம் அறிந்ததே. ஆனால், சாதாரண ஆரஞ்சு கேரட்டை விட கருப்பு கேரட்டில் அதிக சத்துக்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு கருப்பு கேரட் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். கருப்பு கேரட்டின் பல்வேறு மருத்துவ குணங்கள், நன்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கருப்பு கேரட்டின் ஊட்டச்சத்துக்கள்: கருப்பு கேரட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அந்தோசயினின்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்தோசயினின்கள்தான் கருப்பு கேரட்டுக்கு கரும் ஊதா நிறத்தை கொடுக்கின்றன. இவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்களாக செயல்பட்டு உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.
சர்க்கரை நோய்க்கு கருப்பு கேரட்: சர்க்கரை நோயாளிகளுக்கு கருப்பு கேரட் மிகவும் பயனுள்ள ஒரு உணவு. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கருப்பு கேரட்டில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை உடலில் மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும் கருப்பு கேரட் உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கருப்பு கேரட்டை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
செரிமான ஆரோக்கியத்திற்கு கருப்பு கேரட்: கருப்பு கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும் உதவுகிறது. மேலும், வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளையும் கருப்பு கேரட் குணப்படுத்தும்.
மேலும் இந்த கேரட் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. மேலும், கருப்பு கேரட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
கருப்பு கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து. கருப்பு கேரட்டை உட்கொள்வதன் மூலம் மாலைக்கண் நோய் மற்றும் பிற கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கேரட்டை பச்சையாகவோ, ஜூஸாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். சாலடுகள், சூப்கள் மற்றும் பிற உணவுகளில் கூட கருப்பு கேரட்டை சேர்க்கலாம்.