வயது ஆக ஆக மூளை மங்கிவிட்டதா? மூளையின் ஆற்றலை அதிகரிப்பது எப்படி?

'தி பிரைன் கிளிஃப்' புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் நார்மன் ஸ்வான் கூறும் வயது தொடர்பான மூளை மாற்றங்களும் எளிய தீர்வுகளும்.
Brain Aging - மூளை முதுமையடைதல்
Brain Aging - மூளை முதுமையடைதல்Image Credit: ChatGPT
ச. நாகராஜன்

ச.நாகராஜன், மங்கையர் மலர், தினமணி, ஆனந்த விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தி இந்து உள்ளிட்ட 46 இதழ்களில் 6000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். புஸ்தகா, நிலாச்சாரல் உள்ளிட்ட பதிப்பகங்கள் வழியாக இதுவரை 219 நூல்களை வெளியிட்டுள்ளார்.

Updated on: 

வயது ஏற ஏற நம் அனைவருக்கும் ஒரு கவலை - முன் போல அவ்வளவாக நமது மூளை திறம்பட வேலை செய்யவில்லையே என்று!

இப்போது பரபரப்பாக உலகெங்கும் விற்பனையாகும் ‘மூளை செங்குத்துப்பாறை’ (The Brain Cliff) என்ற புத்தகம் நமது பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது.

இதை எழுதியவர் டாக்டர் நார்மன் ஸ்வான் (Dr. Norman Swan) என்பவர்.

Dr. Norman Swan - The Brain Cliff
Dr. Norman Swan - The Brain Cliff

ஸ்காட்லாந்தில் 1953ம் வருடம் பிறந்த டாக்டர் நார்மன் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். சிறந்த மருத்துவர். இவர் ஒரு பத்திரிகையாளர். அனைத்து விஷயங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சிறந்த ஒலிபரப்பாளரும் கூட.

ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள இவர் கோவிட் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். இவரது மூன்று புத்தகங்கள் உலகளாவிய விதத்தில் சிறந்த விற்பனையை அடைந்துள்ளது.

மூளையைப் பற்றி நாம் அறியாத முக்கியமான மூன்று விஷயங்களை இவர் நம் முன் வைக்கிறார்.

முதலாவது, மூளையில் நமக்கு ஏற்படும் மாறுதல்கள் அனைத்தும் மூளைச் சிதைவடைவதைக் குறிப்பிடுவன அல்ல. ஆகவே இருபது வயதில் கூரிய மூளைத் திறன் பெற்ற நமக்கு இப்போது இப்படி ஆகி விட்டதே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம், நமது மூளை மாறி தான் விட்டதே தவிர அழுகிப் போய்விடவில்லை. Fluid Intelligence எனப்படும் பிரச்சினையை வெகு வேகமாகத் தீர்க்க உதவும் மூளை ஆற்றல் மாறினாலும் கூட Crystallised Intelligence எனப்படும் அனுபவ பூர்வமான அறிவு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பது தான் உண்மை.

அடுத்ததாக, சாரம் கட்டுதல் எனப்படும் Scaffolding மூளையைப் பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான விஷயம். வயது ஏற ஏற நமது மூளைத் திறனைப் பாதுகாக்கவும் அதை இன்னும் வளர்க்கவும் நமது மூளை நமது நரம்புமண்டலத்தில் ஒரு சாரத்தைக் கட்டுகிறது. இது வானளாவிய கட்டிடத்தில் வெளிப்புறத்தில் ஒரு சாரம் கட்டுவது போல அமைகிறது. இது முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பாதுகாக்கிறது.

அடுத்ததாக இந்த சாரத்தை கொஞ்சம் வலுப்படுத்துவது தான். நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம்!

இதற்காக டாக்டர் நார்மன் ஏழு சூப்பர் வயதானவர்களை நேரில் கண்டு சந்தித்து அளவளாவினார். படிப்பறிவே இல்லாத 95 வயது காலணி தயார் செய்பவரிலிருந்து ஜப்பானில் க்யுஷ் என்ற இடத்தில் இன்னும் மக்டொனால்டில் வேலை பார்க்கும் 94 வயதான பெண்மணி முடிய பலரும் இதில் அடங்குவர். அவர்கள் தாங்கள் கட்டிய சாரத்தை நன்கு அமைத்து வலுப்படுத்தும் திறன் கொண்டவர்கள். அவர்களுக்கு மன அழுத்தமே இல்லை. அவர்கள் பிரச்சினைகளை எளிதில் தீர்ப்பவர்கள். முன்மூளை மடலை (Prefrontal Cortex) அவர்கள் திறம்பட நன்கு பாதுகாக்கிறார்கள்.

நாற்பது வயது ஆகி விட்டதே என்று யாரும் கலக்கம் அடைய வேண்டாம் என்று கூறும் நார்மன் பல வழிகளை மேற்கொள்ளலாம் என்று யோசனை கூறுகிறார்.

உடல் பயிற்சி மூளையை வலுப்படுத்துவதோடு மூளையின் சாரத்தை நன்கு கட்டமைக்கிறது.

வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் உணவான கீரை, தயிர், பெர்ரி பழம் ஆகியவற்றுடன் கூடிய சைவ உணவு மூளையை நன்கு பாதுக்காக்க வல்லது.

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்ததும் தொடர் தும்மலா? மழைக்காலத்தில் அதிகரிக்க என்ன காரணம்?
Brain Aging - மூளை முதுமையடைதல்

அடுத்து மனது அங்குமிங்கும் அலைந்து அலைபாய்கிறது இல்லையா, அதை திறம்படச் செய்ய, மனதில் ஒரு காலப்பயணம் செல்வது இதற்கு உதவும். கடந்த காலத்தை கழட்டி விட்டு, நிகழ்காலத்தில் நங்கூரம் போட்டு நம்மை நிலை நிறுத்தி எதிர்காலத்தைப் பற்றி மனதில் கற்பனைச் சித்திரம் வரைவது ஒரு நல்ல வழியாகும். வயது அதிகமாக அதிகமாக கடந்த காலம் தான் நம்மில் முன்னணியில் வந்து எப்போதும் நிற்கிறது. மனதில் செய்யப்படும் காலப்பயணமானது நமது மூளையில் கட்டும் சாரத்தை வலுப்படுத்துகிறது.

ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு இந்த விஷயத்தில் நமது மரபணுக்கள் நமது உதவுவதில்லை என்பது தான்.

நாம் இப்போது எந்தச் சூழ்நிலையில் வாழ்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம் என்றனர் நார்மன் பேட்டி கண்ட 95 வயது சூப்பர் வயதுக்காரர்கள்.

இவரது புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயம் Don’t Retire என்பதாகும். ஓய்வு எடுக்க வேண்டாம் என்று இவர் கூறுவதன் அர்த்தம் புதிய பொழுதுபோக்கு வேலைகளில் ஈடுபடுதல், தன்னார்வத் தொண்டு செய்தல், புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ளல் போன்றவையாகும். ஈஸி சேரில் படுத்துக் கொண்டு டிவி முன் அமர்வது ஒரு மோசமான செயல் என்பது இவரது கருத்து.

பிரபல பத்திரிகையான கார்டியன் பத்திரிகைக்கு அளித்த சுவாரசியமான இவரது பேட்டி இப்போது அனைவரது பேசு பொருள் ஆகி விட்டது.

நமக்கு வயது ஒரு பொருட்டில்லை இனி!

இதையும் படியுங்கள்:
இரவில் திடீரென கால் தசைப்பிடிப்பா? இந்த தப்பை நீங்களும் செய்யுறீங்களா?
Brain Aging - மூளை முதுமையடைதல்

Reference: