முதுமையிலும் இளமை... 'பூனை மீசை' மூலிகை மேஜிக்!

Cat’s Whiskers herb benefits
Cat’s Whiskers herb benefits
Published on
  • பூனை மீசை மூலிகை (Cat’s Whiskers herb benefits)

    அல்லது சீரகத்துளசி என்பது சிறுநீரகம் சார்ந்த பல நோய்களுக்கு பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது.

  • சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தினை சுத்தம் செய்யும்.

  • பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை, மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • பூனைமீசை மூலிகை வாதநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேகவெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம்.

  • மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.

  • உடலில் உள்ள தேவை இல்லாத கெட்டநீர், தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது.

  • கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிறப்பாக செயல்படுகிறது.

  • சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது. மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது.

  • சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும்.

  • இதனை கிரீன் டீ போல தினசரி அருந்தலாம். தினசரி 2 வேளை பயன்படுத்துவதால் மேற்கண்ட அனைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம். 

இதையும் படியுங்கள்:
அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் 2: பயம் காட்டும் நீர்க்கட்டி! 'கன்னி முலிகை' மிகச் சிறந்த மருந்து!
Cat’s Whiskers herb benefits

இந்த டீ தயாரிக்க 1.1/2 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5 கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனை வெல்லம் சேர்த்துகொள்ளலாம் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com