டிரை ஃப்ரூட்ஸ்களில் ஒன்றான முந்திரி பருப்பில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச் சத்துக்கள் என பல விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இனிப்புகளில் தவறாமல் பயன்படுத்தப்படும் முந்திரிப் பருப்பை சாப்பிடக்கூடாத 5 பேர் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. உடல் எடை அதிகரிப்பு: முந்திரி பருப்பில் அதிக அளவு கொழுப்பும் கலோரிகளும் இருப்பதால் உடலில் அதிக அளவு கலோரிகளை சேமிப்பதற்கு வழிவகுக்கிறது. இதனால் காலப்போக்கில் உடல் எடை பிரச்னைக்கு வழி வகுக்கும் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முந்திரி பருப்பை தவிர்ப்பதே நல்லது.
2. டயாபடீஸ்: முந்திரி பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் இருப்பதால், இதனை அதிகமாக சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ் அளவுகளை அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு சில சமயங்களில் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் டயாபடீஸ் நோயாளிகள் முந்திரி பருப்பை அளவோடு சாப்பிடுவது நல்லது.
3. இரத்த உறைதல் பிரச்னைகள்: முந்திரி பருப்பில் வைட்டமின் K அதிகமாகக் காணப்படுவதால் இந்த ஊட்டச்சத்து இரத்த உறைதலுக்கு உதவுகிறது. எனவே, இரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள் அதிக அளவில் முந்திரி பருப்பு சாப்பிட்டால் இரத்த உறைதல் அல்லது உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட நேரிடும்.
4. தொண்டை பிரச்னைகள்: ஒருசிலருக்கு, அதாவது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு முந்திரி பருப்பை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒருவித இறுக்கம் அல்லது கரகரப்பு தன்மை பிரச்னையை அனுபவிக்கின்றனர். இத்தகைய அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் முந்திரி பருப்பு சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது.
5. குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்: முந்திரி பருப்பில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தின் காரணமாக இது குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளை உருவாக்கும் என்பதால் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதிக அளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கு ஏற்ப நிறைய ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அளவோடு உண்பது வளமான வாழ்க்கைக்கு உதவும் என்ற அடிப்படையில் முந்திரி பருப்பினை அனைவரும் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.