
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் அருகே உள்ள மோஸ்லி (Mosely) என்ற கிராமத்தில் மலர் மருத்துவம் என்னும் புது சிகிச்சை முறையைக் கண்டறிந்த டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach) பிறந்தார். (பிறப்பு 24-9-1884 மறைவு 27-11-1936)
கேம்பிரிட்ஜில் படித்து பப்ளிக் ஹெல்த்தில் ஒரு டிப்ளமாவை அவர் பெற்றார். பின்னர் லண்டனில் யுனிவர்ஸிடி காலேஜ் ஹாஸ்பிடலில் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்க ஆரம்பித்தார். நேஷனல் டெம்பரன்ஸ் ஹாஸ்பிடலில் 21 வருடம் வேலை பார்த்து நல்ல அனுபவத்தைப் பெற்றார்.
டாக்டர்கள் வியாதிகளை இனம் கண்டு குணப்படுத்தும் விதத்தில் அவர் அதிருப்தி கொண்டார். நோயாளிகள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் வருத்தமுற்றார்.
தனது 43வது வயதில் தனது மருத்துவ பிராக்டீஸை விட்டு விட்டார். தாவர வகைகளை ஆராய ஆரம்பித்தார். 1932 வாக்கில் மலர்களை அடிப்படையாகக் கொண்டு 12 மருந்துகளை அவர் கண்டுபிடித்தார். அடுத்து 1933ல் இன்னுமொரு ஏழு மருந்துகளை அவர் உருவாக்கினார்.
1934ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட்ஷைரில் உள்ள மவுண்ட் வெர்னானுக்கு அவர் இடம் பெயர்ந்தார். அங்குள்ள தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலும் அவர் அலைந்து திரிந்து தன் ஆய்வை மேற்கொண்டு இன்னும் 19 மருந்துகளைக் கண்டுபிடித்தார். தன்னிடம் வருவோருக்கு மலர் மருந்துகளை அவர் தர ஆரம்பித்தார்.
பத்திரிகைகளில் அவரது மலர் மருந்துகளைப் பற்றிய செய்திகள் வரவே பொதுமக்கள் திரளாக அவரை நாடி வந்தனர். ஆனால் ஜெனரல் மெடிகல் கவுன்சில் அவரது மலர் மருத்துவ விளம்பரங்ளை அங்கீகரிக்கவில்லை. என்றாலும் தனது மலர் மருத்துவ முறைகளை அவர் தொடர்ந்து பரப்பினார். 1938ம் ஆண்டு மிக அமைதியாக தன் உயிரை நீத்தார்.
அவர் கண்டுபிடித்த மருந்துகள் மொத்தம் 38.
அக்ரிமனி, ஆஸ்பென், பீச், செண்டாரை, செராட்டோ, செஸ்ட்நட் ப்ளம், செஸ்ட்நட்பட், சிக்கரி, க்ளெமடிஸ், க்ராப் ஆப்பிள், எல்ம். ஜென்ஷன், கார்ஸ், ஹீதர், ஹால்லி, ஹனிசக்கிள், ஹார்ன்பீம், இம்பேஷன்ஸ், லார்ச், மிமுலஸ், மஸ்டர்ட், ஓக், ஆலிவ், பைன், ரெட் செஸ்ட்நட், ராக் ரோஸ், ராக் வாட்டர், செலெராந்தஸ், ஸ்டார் ஆஃப் பெத்லஹேம், ஸ்வீட் செஸ்ட்நட், வெர்வெய்ன், வைன், வால்நட், ஒய்ட் செஸ்ட்நட், வைல்ட் ஓட், வைல்ட் ரோஸ், வில்லோ ஆகிய இந்த 38 மலர் மருந்துகளும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகின்றன.
* மலர் மருந்துகளின் விலை மற்ற அலோபதி மருந்துகளை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.
*இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.
*ஆண், பெண் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்.
*ஆனால் நல்ல ஒரு மலர் மருத்துவரிடம் சென்று தனது குறைகளைச் சொன்னால் போதும். கூறுகின்ற வார்த்தைகளிலேயே மலர் மருத்துவர் வியாதி இன்னதென்று நிர்ணயம் செய்து மருந்தை சிபாரிசு செய்வார்.
*ஹோமியோபதி மருந்துகளைப் போல சின்னச் சின்ன உருண்டைகளில் இரண்டு அல்லது மூன்றை வாயில் போட்டு சிறிது நீரை அருந்த வேண்டும். ஓரிரு நாட்களிலேயே குணம் தெரிய ஆரம்பிக்கும்.
*முக்கியமாக மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது தரும் பலனை உடனே உணர முடியும். ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மலர் மருந்து உண்டு.
*கர்ப்பிணிகள் தங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசித்தபின் இவற்றை உட்கொள்ளலாம்.
*இந்த மருந்துகள் ஹோமியோபதி மருந்துகளை விற்கும் மருத்துவக் கடைகளில் வாங்கலாம்.
*மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைப்பெறுவது அவசியம்.