இந்த 'மந்திர' டீயை குடியுங்க! ஒரே வாரத்தில் உங்கள் சர்க்கரை அளவு 'விர்ர்ர்'ரென்று குறையும் பாருங்க!

White tea benefits and blood sugar level
White tea
Published on

ற்காலத்தில் டீ இல்லாமல் வாழவே முடியாது என்று சொல்பவர்களும் உள்ளனர். அந்த அளவு நாடே டீக்கு அடிமையாகியுள்ளது என்றே கூற வேண்டும். தமிழ்நாட்டில் தெருமுனைக்கு ஒரு டீக்கடையை பார்க்க முடியும். டீ என்று சொன்னாலே பலருக்கும் அது ஒரு புத்துணர்ச்சி, ஏன் போதை என்று கூட சொல்லலாம்.

ஆனால், டீ குடிப்பதால் உடலுக்கு சில கெடுதல்கள் ஏற்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? டீ பாலில் தயாரிக்கப்படுவதால் டயட்டில் இருப்பவர்களால் அதனை தவிர்க்க வேண்டிய சூழல் உருவாகும். இவர்களுக்கு ஒரு மாற்றாகவும் என்றைக்கும் உடல் நல்ல நிலையில் இருப்பதற்கும் ஒயிட் டீ மிகவும் உதவியாக இருக்கும்.

தேயிலை செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை பறித்து, அதிகமாகப் பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ. தேயிலை செடியின் இலைகள் குருத்துகளாக இருக்கும்போது, முடிகள் போன்ற வெள்ளை நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும்.

அந்தப் பருவத்திலேயே, இந்த இலைகள் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு ஒயிட் டீ(White tea) என்று பெயர் உண்டானது.

ஒயிட் டீ பல்வேறு மருத்துவப் பண்புகள் கொண்டதாகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சருமம், இதயம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தையும் சீராக்கும். புற்றுநோயை தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஒயிட் டீ தரக்கூடிய பல்வேறு நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு இதில் அதிகமாக உள்ளதால் உடலில் தேங்கி இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அழித்துவிட்டு புது செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இவை இரத்த அழுத்தம், நீரிழிவு, வயதாகிய தோற்றம் உள்ளிட்டவைக்கு தீர்வு அளிக்கும். ஒயிட் டீ அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

பற்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் டீயைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றத்தைப் போக்கி, பற்களை வெண்மையாக்கி, சொத்தை பற்கள் உருவாவதை தடுக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
Shocking But True: சத்தமில்லாமல் சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு! நாம் கட்டாயம் அறிய வேண்டிய உண்மை!
White tea benefits and blood sugar level

மெனோபாஸ் முன்னர் வரக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கி எலும்புகளை வலுவாக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை கொண்டது ஒயிட் டீ. தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களுக்கு இதை அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.

-விஜி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com