தினமும் ஒரு துண்டு இஞ்சி போதும்; தொப்பை, மூட்டு வலி, அத்தனையும் பறந்துடும்!

இஞ்சி மூலம் தொப்பையை குறைப்பது எப்படி? கொழுப்பைக் கரைக்க, பித்தம் தணிய மற்றும் மாதவிடாய் வலி போக்க இஞ்சி எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இஞ்சி | Ginger
இஞ்சி | Ginger
Updated on

தினமும் நாம் சமையலில் சேர்க்கும் சாதாரண இஞ்சி, உண்மையில் பல நோய்களை விரட்டும் ஒரு அற்புதமான இயற்கை மருந்து என்பது உங்களுக்குத் தெரியுமா? தலைவலி, மூட்டு வலி, உடல் பருமன் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே எப்படி தீர்வு காண்பது? இஞ்சியைப் பயன்படுத்தி இளமையான தோற்றத்தைப் பெறுவது எப்படி போன்ற வியக்க வைக்கும் பல ஆரோக்கிய ரகசியங்களை இந்தத் தொகுப்பில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்!

இஞ்சி தானும் சுலபமாக செரித்து, தன்னுடன் சேர்ந்து இருக்கும் மற்ற உணவுகளையும், சுலபமாக செரிக்கச் செய்யும். வயிற்றுக் கோளாறு, கர்ப்பிணி பெண்களுக்கு வரும் மசக்கை, வாந்தி, மூட்டு வலி, ஜுரம் என பல நோய்களுக்கு நிவாரணம் தரும் இயற்கை மருந்து இஞ்சி.

இஞ்சியின் மருத்துவ குணங்கள் என்ன?

  • இது குடலின் சேரும் கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. அதோடு கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.

  • ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தை குறைக்கிறது.

  • மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி, இதய மற்றும் சுவாச தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
டீ பிரியர்களே கவனம்! டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பது இவ்வளவு கேடா?
இஞ்சி | Ginger

வீட்டிலேயே செய்யக் கூடிய இஞ்சியின் எளிய மருத்துவத் தீர்வுகள்:

  • பசி உணர்வே இல்லாதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட நாவின் சுவை மொட்டுகளை தூண்டி இஞ்சி பசியை தூண்டிவிடும்.

  • பித்தம் அதிகமனால் குமட்டல் இருக்கும். இஞ்சியை தோல் சீவி சுத்தம் பண்ணி சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாட்டிலில் தேன் ஊற்றி, ஊறிய பின் தினமும் ஒரு துண்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இஞ்சி | Ginger
இஞ்சி | Ginger
  • இஞ்சிச் சாறில் வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறுகள் நீங்கும். வாதத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு இது தீர்வு தருகிறது.

  • பனியின் தாக்கத்தால் ஏற்படும் தலைவலிக்கு, இஞ்சியைத் தோல் சீவி பசை போல அரைத்து, வலிக்கும் தலைப்பகுதியில் தடவினால் வலி காணாமல் போகும்.

  • ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி அரைத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் இடுப்பு பகுதியில் கொழுப்பு சேராமல் தடுக்கும். கொழுப்பையும் கரைக்கும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் இஞ்சி துண்டுகள் போட்டு சூடாக்கி வடிகட்டி சில துளிகள் தேன் கலந்து சாப்பிட தொப்பை குறையும்.

  • இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட முகச் சுருக்கம் நீங்கி இளமைத் தோற்றம் பெறும்.

இதையும் படியுங்கள்:
நீங்க வாங்குவது நிஜமான பனீரா? பாக்கெட்டைத் திருப்புங்க... உண்மை உங்களுக்கே தெரியும்!
இஞ்சி | Ginger
  • மாத விலக்கு நாளில் வரும் வயிற்று வலிக்கு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக சுண்டியதும் வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டீஸ்பூன் இரண்டு வேளை குடிக்க வலி குறையும்.

  • தினசரி உணவில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தக்குழாயின் உட்புறம் காலப்போக்கில் இதய அடைப்பு சேர்வைதை இஞ்சி தடுக்கிறது.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் இயற்கை முறையிலான எளிய மருத்துவத் தீர்வுகள் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி புத்துணர்ச்சியான சுறுசுறுப்பான வாழ்க்கையைப் பெறலாம்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com