

இன்றைய பரபரப்பான உலகில், அதிக விலை கொடுத்து வாங்கும் செயற்கையான ஊட்டச்சத்து பொடிகளுக்கு மத்தியில், நமது சமையலறையியே இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த 'சத்து மாவு' உள்ளது என்பது பலருக்குத் தெரிவதில்லை.
அதில் குறிப்பாக, வறுத்த பொட்டுக்கடலை அல்லது கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படும் பானமும் ஒன்று. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது இந்த சத்து மாவு.
சத்து மாவு என்றால் என்ன?
சத்து மாவு என்பது வறுத்த கடலையை அரைத்துத் தயாரிக்கப்படும் ஒரு பொடியாகும். இது முக்கியமாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பாரம்பரிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடலை மாவு மட்டுமல்லாமல், பார்லி, கோதுமை மற்றும் பல தானியங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் 'மல்டிகிரைன்' சத்து மாவுகளும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுள் கடலை சத்து மாவின் ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
இந்த மாவில், கலோரிகள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை நீண்ட நேரத்திற்கு வழங்குகின்றன. மேலும், இது குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் சீராக வைக்கவும் உதவுகிறது.
சத்து மாவின் ஆரோக்கிய நன்மைகள்:
எடை மேலாண்மை: உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும். தண்ணீரில் கலந்து குடிக்கும்போது, இதில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். அதே சமயம், பாலில் கலந்து குடிக்கும்போது இது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும்.
ஆற்றல்: காலையில் ஒரு கிளாஸ் சத்து மாவு பானம் குடிப்பது, நாள் முழுவதும் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
செரிமானத்தை மேம்படுத்துதல்: இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளைத் தடுக்கிறது.
உடலைக் குளிர்ச்சியாக வைத்திருத்தல்: கோடைக் காலங்களில் குளிர்ந்த நீரில் சத்து மாவை கலந்து குடிக்கும்போது, இது உடல் வெப்பத்தைத் தணித்து, நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு: இதன் கிளைசெமிக் குறியீடு குறைவு என்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைச் சீராக வைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
சருமப் பொலிவு: இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம், சருமத்தைப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
சுவையான மற்றும் ஆரோக்கியமான சத்து மாவு பானம் தயாரிப்பது எப்படி?
எடை இழப்புக்கு: 2 டீஸ்பூன் சத்து மாவு, ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர், சிறிது உப்பு, சீரகத் தூள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.
எடை அதிகரிக்க: 2 டீஸ்பூன் சத்து மாவு, ஒரு கிளாஸ் பால் மற்றும் சிறிது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து காலை உணவுக்குப் பின் அல்லது மாலையில் குடிக்கவும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
சத்து மாவு ஆரோக்கியமானது என்றாலும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்ளும்போது சிலருக்கு வாயுத் தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம். மேலும், நீண்ட காலத்திற்கு அதிகமாக உட்கொள்ளும்போது இரும்பு மற்றும் துத்தநாகம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கலாம். எனவே, மிதமான அளவில் உட்கொள்வதே சிறந்தது. குறிப்பாக குடல் அழற்சி அல்லது கடுமையான அமிலத்தன்மை கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உட்கொள்வது நல்லது.
Reference:
Sattu Powder Benefits and Drink, Its Side Effects and Nutritional Value
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்).