காலை நேரத்தில் வெறும் காலில் நடப்பதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Walking barefoot
Walking barefoot
Published on

பொதுவாக, காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் செய்வதாகும். அதிலும் காலில் ஷூக்களோ அல்லது செருப்புகளோ அணியாமல் நடைப்பயிற்சி செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பாதங்கள் சமநிலைப்படும்: வெறும் காலில் நடப்பது, 'எர்திங்' அல்லது 'கிரௌண்டிங்' என்றும் அழைக்கப்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பது நமது சருமத்தை பூமியுடன் நெருங்கிய தொடர்புடன் வைக்கும். இதன் மூலம் பூமியின் எதிர்மறை அயனிகள் நம் உடலின் நேர்மறை அயனிகளை பாதங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

மன அழுத்தம் குறையும்: இன்றைய நிலையில்  உள்ளவர்களுக்கு பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்னை மன அழுத்தம். இதனைத் தீர்க்க எளிய வழி வெறுங்காலுடன் நடப்பதால் ஹார்மோன்கள் அதிகரிக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சீம்பால்!
Walking barefoot

நல்ல தூக்கம் கிடைக்க உதவுகிறது: நாம் வெறும் காலில் நடக்கும்போது நமது உடல் நேர்மறை அயனிகளை அகற்றி, எதிர்மறை அயனிகளை  நம் உடலில்  நுழைய அனுமதிக்கிறது. இதனால் மன அழுத்தம், சகிப்புத் தன்மை நீங்கி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனை செய்யும்போது நிச்சயமாக நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்: நமது உடலில் ஈர்ப்பு விசை அனைத்தையும் தன்னை நோக்கி இழுக்கும்போது, நமது இரத்தம் நமது உள்ளங்களில் நன்றாக பரவத் தொடங்கும். நமது நடைப்பயிற்சி இதனால் செயல்முறை எதிர்மறை விளைவுகளை அகற்றி செயல்படுவதால் உடலில் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மூளை ஆற்றலை அதிகரிக்க செய்யும்: தற்காப்புக் கலைகள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் ஏன் வெறுங்காலுடன் செய்யப்படுகின்றன என்பது பலருக்கு தெரியாது. நமது உடல் முழுவதும் 70 சதவீதம்  தண்ணீரை கொண்டு உள்ளது .நாம் எந்த அளவுக்கு பூமியுடன் இணைந்து இருக்கிறோமோ, அவ்வளவு சரியாக செயல்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பது ஒரு நல்ல சமநிலையை உருவாக்குகிறது. இதனால் நம் மனதை கூர்மைப்படுத்தி, மன உறுதியை வழங்குகிறது. இதனால் மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது.

இயற்கை உணர்வுகள்: இயற்கையான உணர்வுகள் நமது புலன்களை வலிமையாக்குகிறது. நாம் காலணி அணிந்து நடக்கும்போது இந்த இயற்கை அனுபவங்களை அறியாமல் இருக்கிறோம். நம் காலில் உள்ள சில புள்ளிகள் தரையை தொடும் போது நம் புலன்களைத் தூண்டுகிறது. மேலும், வெறுங்காலுடன் நடக்கும்போது நாம் எங்கு நடக்கிறோம் என்பதை பார்க்க மிக விழிப்புணர்வோடு விழிப்புடன் நடக்கிறோம். இதனால் நம் மனதை எச்சரித்து புலன்களை அதிகரிக்கச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
மறைமுகமாகப் பேசி நம்மைத் தாக்குபவர்களை சமாளிக்க சில யோசனைகள்!
Walking barefoot

தசைகளை வலுப்படுத்தும்: வெறும் காலுடன் நடப்பது நமது எலும்புகள், தசைகளை வலிமையாக்கும். வெறும் காலில் நடப்பதால் எலும்பு கால்சியத்தை மேம்படுத்தும். காலை, மாலை சூரிய ஒளிக்கதிர்களால் தீங்கு ஏற்படாமல் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

கண் பார்வை, இதயப் பாதுகாப்பு: நமது இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் இரத்தம் உறையாமலும், கரோனரி தமனிகளில் நோய்கள் வரும் வாய்ப்புகள் குறையும். வெறும் காலில் நடப்பதால் இரத்த சிவப்பணுக்களை சார்ஜ் செய்து நமது இரத்தம் கெட்டியாகாமல் தடுக்கிறது. வெறும் காலுடன் புல் தரையில் நடப்பதால் நம் கால்களில் பல்வேறு அழுத்த புள்ளிகள் செயல்பட்டு கண் பார்வை அதிகரிக்கும். இதனை காலை, மாலை வீட்டில், தோட்டத்தில், பூங்காவில் செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com