அளவுக்கு அதிகமா புரதம் சாப்பிட்டா எடை குறைக்க முடியாதாம்.. அமெரிக்க நிபுணரின் பகீர் வார்னிங்!

உடற்பயிற்சி மோகத்தால் அளவுக்கு அதிகமாக புரத உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த அமெரிக்க பேராசிரியரின் அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்.
Daily protein requirement
Daily protein requirement
Updated on

Daily protein requirement: இன்றைய உடற்பயிற்சி, ஃபிட்னஸ் உலகில் புரதச்சத்து (Protein) மாபெரும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறது. ஜிம்முக்கு செல்பவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எங்கு பார்த்தாலும் புரோட்டீன் ஷேக், புரோட்டீன் பார்களை அதிக அளவில் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது உடலுக்கு உண்மையில் எவ்வளவு புரதம் தேவை என்பதை நாம் கட்டாயம் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். 

இது தொடர்பாக டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தை (Texas A&M University) சேர்ந்த முன்னணி பேராசிரியரான டாக்டர் நிக்கோலாஸ் ட்யூட்ஸ் (Dr. Nicolaas Deutz) பல ஆச்சரியமூட்டும் மருத்துவ உண்மைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். 

அனைவருக்கும் ஒரே அளவு கிடையாது!

புரதத்தின் தேவை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முற்றிலும் மாறுபடும் என்று டாக்டர் நிக்கோலாஸ் ட்யூட்ஸ் ஆணித்தரமாக கூறுகிறார். ஒருவரின் வயது, உடல் எடை, தசை அளவு மற்றும் தினசரி உடல் உழைப்பு ஆகியவற்றை பொறுத்துதான் அவருக்கு எவ்வளவு புரதம் தேவை என்பது முடிவாகிறது.

உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே அளவிலான புரதம் தான் தேவை என்ற பழைய சிந்தனையை நாம் உடனடியாக மாற்றி கொள்ள வேண்டும். உங்களின் உடல் நிலைக்கு ஏற்பவே அந்த அளவீடு தனிப்பட்ட முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அமினோ அமிலங்களின் முக்கியத்துவம்!

பொதுவாக நாம் புரதம் என்று சொல்வதை விட, அதில் அடங்கியுள்ள அமினோ அமிலங்கள் என்று சொல்வது தான் மருத்துவ ரீதியாக மிகவும் சரியானது. தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக புரதம் நிறைந்த உணவுகள் எடையை குறைக்கும் என்ற பெயரில் மிகவும் தீவிரமாக விளம்பரம் செய்து விற்கப்படுகின்றன.

ஆனால் இப்படி அளவுக்கு அதிகமாக புரதத்தை தினமும் எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என மருத்துவர் எச்சரிக்கிறார். அதிக புரத உணவுகளில் தேவையற்ற கொழுப்பு, அதிகப்படியான கலோரிகள் மறைந்திருக்கும். இது உடல் பருமன் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:
நாவல் பழம் சாப்பிடுபவரா நீங்க? - இந்தத் தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க, உயிருக்கே ஆபத்தாகலாம்!
Daily protein requirement

உடலின் தேவை!

ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் புரதம் தேவை என்ற ஒரு பொதுவான விதிமுறையை அனைவரும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் தினசரி வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ப இது அடிக்கடி மாறுபடும். நீங்கள் அன்றாடம் சாப்பிடும் வழக்கமான உணவால் உங்களின் உடல் எடை குறையாமல் சீராக இருந்தாலே, நீங்கள் சரியான அளவில் தான் உணவை எடுத்து கொள்கிறீர்கள் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். அதற்காக தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம்.

நமது உடலுக்குப் புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்றுதான். அதற்காக எதற்கெடுத்தாலும் புரதம் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருக்க கூடாது. இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பதற்காக விளம்பரங்களை பார்த்து கண்டதையும் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட பின் வயிற்றில் ‘கடமுட’ சத்தமா? இதோ முழு விவரம்!
Daily protein requirement

உங்கள் உடலின் உண்மையான தேவையை முழுமையாக புரிந்துகொண்டு ஒரு முறையான சரிவிகித உணவை உண்பதே நீண்ட ஆயுளுக்கு சிறந்தது.

logo
Kalki Online
kalkionline.com