வைட்டமின் ஏ குறைபாடு: பார்வை பறிபோகும் அபாயம்... அலட்சியம் வேண்டாம்!

வைட்டமின் ஏ குறைபாட்டினை சில அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே அறிந்து, அதை தடுக்கும் முறைகளை பார்ப்போம்.
Vitamin A
Vitamin A
Published on

​நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவையான வைட்டமின் ஏ பற்றாக்குறையை அலட்சியமாக விடக்கூடாது. இந்த வைட்டமின் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது கண் பார்வை திறனை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கவும், செல்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்றாகவும் இருக்கிறது. வைட்டமின் ஏ ஊட்டச்சத்தானது கர்ப்பகால பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் கட்டாயம் தேவைப்படும் ஒரு ஊட்டச்சத்து ஆகும்..

இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டால், அது கண்பார்வை பிரச்னைகளில் தொடங்கி சரும பிரச்னைகள் வரை கொண்டு வந்து விடும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி பல வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை திறன் குறைபாட்டிற்கு வைட்டமின் ஏ குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால், இந்த வைட்டமின் குறைபாட்டினை சில அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே அறிந்து, அதை தடுக்கும் முறைகளை பார்ப்போம்.

மாலைக்கண் நோய்

உடலுக்கு போதுமான அளவில் வைட்டமின் ஏ கிடைக்காவிட்டால், கண்களில் உள்ள விழித்திரை சரியாக ஒளியினை உள்வாங்க இயலாது. இதனால் , மாலை நேரத்திலோ வெளிச்சம் குறைவான இடங்களிலோ இவர்களுக்கு பார்வைத்திறன் குறைவாக இருக்கும். இந்த குறைபாடு மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கான ஆரம்பகால அறிகுறியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கேரட்டை மிஞ்சிய பவர்! வைட்டமின் A சத்து நிறைந்த 3 சூப்பர் ஃபுட்ஸ்!
Vitamin A

கண்களில் வறட்சி (Xerophthalmia)

வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் கண்களில் நீர் சுரப்பது குறைந்து, மிகவும் வறண்டு போய் காணப்படும். இதை ஆரம்ப காலத்திலேயே கண்டறியாவிட்டால் விழியின் வெண்படலத்தில் தழும்புகள் ஏற்பட்டு நிரந்தர பார்வை இழப்பிற்கு வழி செய்யும்.

ஆறாத காயங்கள்

உடலில் திசுக்கள் வளர்ச்சி அடைவதற்கு விட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அது குணமாவதற்கு புதிய திசுக்கள் உருவாக வேண்டும். வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், அந்த இடத்தில் திசுக்கள் வளர்வதற்கு நீண்ட தாமதம் ஏற்படலாம். இதனால் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆகும்.

சருமப் பிரச்னைகள்

சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிப்பதற்கு வைட்டமின் ஏ வின் பங்கு அவசியமானது. இதன் குறைபாட்டினால் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளாததால், சருமம் அளவுக்கு அதிகமாக வறண்டு செதில் செதிலாக மாறத் தொடங்கும். சருமம் பிளவுப் படவும் தொடங்க ஆரம்பித்துவிடும்.

வளர்ச்சித் தடை

எலும்புகள் பலமடைந்து வளர்வதற்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். முக்கியமாக குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சி காலத்தில் வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், அவர்களுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்காது. அவர்கள் உயரம் குறைந்தும் பலவீனமான எலும்புகளை கொண்டவராக இருக்கக்கூடும்.

மீண்டும் மீண்டும் நோய் தொற்றுகள்

​வைட்டமின் ஏ குறைபாடு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனம் ஆக்கி விடுகிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சல், சுவாசப்பாதை தொற்றுகள் ஆகியவை அடிக்கடி ஏற்படக்கூடும். இதனால் உடல் ஆரோக்கியம் கெடக்கூடும். நிமோனியா போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு எளிதில் ஆளாக நேரலாம் என்பதால், வைட்டமின் ஏ குறைபாடு ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு வைட்டமின்-ஏ கட்டாயம் தேவை! ஏன் தெரியுமா?
Vitamin A

வைட்டமின் குறைபாட்டை தவிர்க்க, இயற்கை வழியில் ஒரு சில உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இறைச்சி வகைகளில் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது. பால் பொருட்கள், கீரை வகைகள், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், முட்டை, இறைச்சி, மீன், மாம்பழம், பப்பாளி போன்ற உணவு வகைகளில் வைட்டமின் ஏ நிறைய கிடைக்கிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com