சீரியல் பார்த்தால் மூளை வடிவம் மாறுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

வன்முறை மற்றும் துரோகக் காட்சிகளைக் கொண்ட சீரியல்களைப் பார்க்கும்போது மனித மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அறிவியல் ஆய்வு
TV serial - தொலைக்காட்சி சீரியல்கள்
TV serial - தொலைக்காட்சி சீரியல்கள்Image Credit: ChatGPT
ச. நாகராஜன்

ச.நாகராஜன், மங்கையர் மலர், தினமணி, ஆனந்த விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தி இந்து உள்ளிட்ட 46 இதழ்களில் 6000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். புஸ்தகா, நிலாச்சாரல் உள்ளிட்ட பதிப்பகங்கள் வழியாக இதுவரை 219 நூல்களை வெளியிட்டுள்ளார்.

Updated on: 

தினமும் தொலைக்காட்சி சீரியல்களே கதி என்று இருக்கும் அன்பர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பேராபத்தை சமீபத்திய ஆய்வு ஒன்று விளக்குகிறது.

தினமும் வன்முறைக் காட்சிகள், பதை பதைக்க வைக்கும், நடுநடுங்க வைக்கும் நாசகாரக் காட்சிகள்!

சிறுகுழந்தைகளைக் கடத்தி சித்திரவதை படுத்துவது, குண்டுகளைப் போட்டு கொல்வது, கட்டிடங்களை எரிய வைப்பது... இதையெல்லாம் தூக்கியடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சி... கோவில் திருவிழாவில் பிரசாதத்தில் விஷத்தைக் கலந்து அனைவருக்கும் பரிமாறுவது.

இது ஒரு புறமிருக்க இன்னொருவனிடம் குழந்தையைப் பெற்று வேறொருவனை மணப்பது. பொய்ப்பெயர் சொல்லி ஒரு வீட்டில் வாழ்ந்து அங்கிருப்பவனை ஏமாற்றி மணக்க முயல்வது... இது ஒரு புறமிருக்க...

போலீஸ் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் முட்டாளாக்கும் காட்சிகள்...

எதைச் சொல்ல, எதை விட!

அடிதடி ரௌடிகள், கொலை, கொள்ளை காட்சியே இல்லாத சீரியல் ஒன்று உண்டா?

மனமானது, இந்த எதிரிகளைப் பார்த்துப் பார்த்து ஆழ்ந்து மனதில் பதிய வைத்து விடுகிறதாம். விளைவு, சொல்லத் தேவையில்லை. நமது நிம்மதியும் போச்சு, நம்மால் மற்றவர்களின் நிம்மதியும் போகும்.

சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தொலைக்காட்சி சீரியல்களே பார்க்காத 21 கல்லூரி மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் முன்னர் அவர்களது மூளையை ஸ்கேன் செய்யப்பட்டது. எட்டு பிரதான பாத்திரங்களை அவர்கள் பார்த்தனர். பின்னர் ஆறு எபிசோடுகளை அவர்கள் பார்த்தனர். இன்னொரு ஸ்கேன் இப்போது எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றிய அவர்களது அபிப்ராயம் கேட்கப்பட்டது. நட்போடு உள்ள பாத்திரமா, அல்லது வெறுப்பை உமிழும் பாத்திரமா என்று.

ஆய்வின் முடிவு சொன்னது என்ன? சில மணி நேரம் தெரியாத நபர்களைப் பார்த்தால் மூளையின் வடிவம் மாறுகிறது என்பதைத் தான்.

அதாவது மனமானது பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை. உறவின் தன்மையைத் தான் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறது.

இதுவரை பார்த்திராத எட்டு பாத்திரங்களைப் பற்றி அந்த மாணவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஆறு எபிசோடுகளைப் பார்த்த பின்னர் துரோகம், பேராசை, வாழ்க்கை வரலாறு, முரண்பாடு எல்லாம் அவர்களுக்கு அத்துபடியாகி விட்டது! அவர்களின் கதையை கேட்டு, பார்த்த பின்னர் அவர்களுக்கு மூளை தனியாக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து விட்டது.

அவர்கள் எதிரியா, நண்பனா, போட்டியாளரா என்பதை மூளை நன்கு படம் பிடித்து வைத்துக் கொண்டது. மூளையின் முன்மடலும் இதர பகுதிகளும் எதிர்ப்பை மிக அதிகமாக கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இந்தப் பகுதிகள் தாம் திரைப்படங்களைப் பற்றியும் மற்றவர்கள் உலகைப் பார்க்கும் பார்வையையும், சமூகத்தினரின் நடத்தையையும் பற்றி நமக்குச் சொல்லித் தருகிறது.

TV serial - தொலைக்காட்சி சீரியல்கள்
TV serial - தொலைக்காட்சி சீரியல்கள்Image Credits: Gemini

இது நம்மையும் இப்படிப்பட்ட சமூக விரோத நடத்தைகளில் தூண்டிவிடும் என்ற அபாயத்தையும் செய்கிறது.

ஏன் வன்முறைகளுக்கு ஒரு விசேஷ கவனம்? சண்டை சச்சரவுகள் இனி வரப்போவதற்கான அடையாளம்! ஆகவே மனம் இந்த எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கு நினைவகத்தில் தனி இடம் தருகிறது.

இந்த வன்முறை சீரியல்களைப் பார்த்தாலே போதும். நேரடியாக நாமே அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதில்லை. பார்ப்பவர்கள் பாத்திரங்களை ஒரு போதும் நிஜமாகச் சந்தித்ததில்லை என்றாலும் அவர்களது மூளை இந்த நெகடிவ் பாத்திரங்களின் உறவுமுறைகளையும் செயல்பாடுகளையும் நன்கு படம் பிடித்து வைத்துக் கொள்கிறது.

இது நமக்கு துரோகத்தை எப்படிச் செய்வது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது.

யாரை நம்பலாம் என்று சொல்லித் தருகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வயது 70-ஐ கடந்துவிட்டதா? நீங்களும் ஒரு செப்டோலசண்ட் தான்!
TV serial - தொலைக்காட்சி சீரியல்கள்

மூளையின் ப்ரிக்யூனெஸ் (Precunes) என்ற பகுதி இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்த பின்னர் எப்படி ஒருவரைப் பிரிக்கலாம், யாரோடு சேரலாம் என்பதையெல்லாம் சொல்லித் தருகிறது.

பின்னர் இதை எப்படி சமூகத்தில் செயல்படுத்தலாம் என யோசிக்க ஆரம்பிக்கிறது.

பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டுடே இதழ் இது பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. 04-08-2026 தேதியிட்ட இதழில் பிரபல விஞ்ஞானியும் ஆரோக்கியம் பற்றிய அறிவுரைகளை வழங்கும் ஆலோசகருமான வில்லியம் ஏ. ஹேஸல்டின் (William A. Haseltine Ph.D) இதை விளக்கி சமீபத்தில் எழுதி இருக்கிறார்.

ஆகவே உடனடியாக இப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகளை வீட்டில் இருந்து பார்க்கும் பெண்மணிகளும், ஆண்களும் தாங்கள் பார்ப்பதை நிறுத்துவதோடு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதன் தீமைகளை எடுத்துக் கூற வேண்டும். நல்லனவற்றை மட்டுமே பார்ப்போம்; நல்லதையே செய்வோம்!

இதையும் படியுங்கள்:
வயது ஆக ஆக மூளை மங்கிவிட்டதா? மூளையின் ஆற்றலை அதிகரிப்பது எப்படி?
TV serial - தொலைக்காட்சி சீரியல்கள்

Reference: