சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொண்டால்...? டோட்டல் டாமேஜ்தான் போங்க!

Red Meat
Red Meat
Updated on

கல்லீரல் என்பது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை நிகழ்த்தும் உறுப்பு ஆகும். செரிமானம், வளர்சிதை மாற்றம், இரத்த சுத்திகரிப்பு, இரத்தம் உறைதல், நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, வைட்டமின் சேமிப்பு, புரத தொகுப்பு, பிலிரூபின் செயலாக்கம், அம்மோனியா மாற்றம், முதலியவை அவற்றில் அடங்கும்.

நமது உடலின் மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்கிறது. பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பணியையும் கல்லீரல் செய்கிறது.

பொதுவாக கல்லீரல் பிரச்னை என்பது 70 சதவீதம் கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்னரே வெளியே தெரியவருகிறது. கல்லீரல் என்பது மற்ற உறுப்புகளை போல் அல்லாமல் தன்னைத்தானே மீட்டமைத்து சரி செய்து கொள்ளும் தன்மை உடையது. ஆனால் தொடர்ந்து மது அருந்தி அதன் செயல்பாட்டை பாதிக்கச் செய்வதால், ஒருகட்டத்தில் மோசமடைந்து அதனால் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. நம்முடைய பாஸ்புட் உணவு பழக்கமும் நமது கல்லீரலைத்தான் பாதிக்கிறது.

திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்க உதவுகிறது. பிஸ்சா, பர்கர், போன்ற துரித உணவுகளும் கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும். இது போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குளியல் அறைக்கும் பக்கவாதத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா? 
Red Meat

வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இது உதவும். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை (Hypolipidemic) உள்ளது. எனவே நெல்லிக்காய் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் கல்லீரலின் சுமையை குறைக்க முடியும். கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன.

உடலில் எங்கே வலி என்றாலும், உடனே ஒரு வலி கொல்லி மாத்திரையைத்தான் தேடுவோம். இது கல்லீரலை மதுவுக்கு மேலாக பாதிக்கும். சில மருந்துகள், நாள்பட்ட ஆல்கஹால் பயன்பாடு, உண்ணாவிரதம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் அசெட்டமினோஃபென் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
காலை உணவைத் தவிர்ப்பதால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள்!
Red Meat

ஆரோக்கியமாக இருக்க உப்பு மற்றும் சர்க்கரையை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும் என்றாலும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இந்த இரண்டையும் அதிகமாக உட்கொள்வதை எப்போதும் தவிர்க்க வேண்டும்.

இது தவிர, கல்லீரலை வலுவாக வைத்திருக்க, கல்லீரலை பலவீனப்படுத்தும் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com