நடக்கும் போது முழங்கால் வலிக்கிறதா? அலட்சியம் வேண்டாம்.. 5 முக்கிய காரணங்கள் இதோ!

வயது மூப்பு மட்டுமல்ல, இளைஞர்களையும் பாதிக்கும் முழங்கால் வலியின் பின்னணி மற்றும் மருத்துவ ஆலோசனை.
Knee pain  - முழங்கால் வலி
Knee pain - முழங்கால் வலிImage redit: ChatGPT
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதோ, மாடிப்படி ஏறி இறங்கும்போதோ முழங்காலில் வலி ஏற்படுகிறதா? வயதாகிவிட்டது, இனி இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து வலியைப் புறக்கணிக்கிறீர்களா? முழங்கால் வலிக்குப் பின்னால் இருக்கும் 5 முக்கியக் காரணங்களையும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

நடைப்பயிற்சி என்பது உடல்நலத்துக்கு மிகவும் அவசியமானது. ஆனால், நடக்கும்போதே முழங்காலில் வலி ஏற்பட்டால் பலரும் நடைப்பயிற்சியை நிறுத்திவிடுகிறார்கள். சிலரோ வலியைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார்கள். உண்மையில், முழங்கால் வலி வயதானவர்களுக்கு மட்டுமல்ல; இளைஞர்களுக்கும் ஏற்படலாம். இதற்கான காரணத்தைக் கண்டறிவதே முக்கியம்.

முழங்கால் வலிக்கான 5 முக்கியக் காரணங்கள்:

மூட்டுத் தேய்மானம் (Osteoarthritis):

வயது அதிகரிக்கும் போது முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு படிப்படியாகத் தேயலாம். இதனால் நடக்கும்போதும், படியேறும்போதும் வலியும், காலையில் எழுந்ததும் இறுக்கமும் ஏற்படலாம்.

தசை பலவீனம்:

தொடைப்பகுதி மற்றும் முழங்காலைச் சுற்றியுள்ள தசைகள் வலுவிழந்தால் மூட்டுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இதுவும் நடக்கும்போது வலியை உண்டாக்கலாம்.

தசைநார் அழற்சி:

அதிக நேரம் நடப்பது, ஓடுவது, திடீரென உடற்பயிற்சியை அதிகரிப்பது போன்றவற்றால் முழங்காலைச் சுற்றியுள்ள தசைநார்களில் அழற்சி ஏற்பட்டு வலி உண்டாகலாம்.

மெனிஸ்கஸ் அல்லது தசைநார் காயம்:

திடீரெனக் கால் திரும்புவது, தவறி விழுவது போன்றவற்றால் மூட்டிலுள்ள மெனிஸ்கஸ் எனப்படும் குருத்தெலும்பு அல்லது தசைநார்கள் பாதிக்கப்படலாம். அப்போது வீக்கம், வலி, முழங்கால் மடக்குவதில் சிரமம் ஏற்படலாம்.

அதிக உடல் எடை மற்றும் மூட்டுப் பை அழற்சி:

உடல் எடை அதிகமாக இருந்தால் முழங்காலுக்கு அழுத்தம் கூடும். மேலும், மூட்டுக்கு அருகிலுள்ள திரவப்பைகள் வீக்கமடையும் பை அழற்சியாலும் வலி ஏற்படலாம்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

  • வலி சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்தாலோ, சில வாரங்களாகக் குறையாமல் இருந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும்.

  • முழங்கால் அதிகமாக வீங்குதல், நடக்க முடியாமை, காலை மடக்கவோ நீட்டவோ முடியாமை, மூட்டு பூட்டிக்கொள்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்கக் கூடாது.

  • காயத்துக்குப் பிறகு திடீர் வீக்கம் அல்லது கடுமையான வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ உதவி தேவை.

  • காய்ச்சலுடன் முழங்கால் சிவந்து, சூடாகவும் வீங்கியும் இருந்தால் அவசரமாகப் பரிசோதிக்க வேண்டும்.

Knee pain  - முழங்கால் வலி
Knee pain - முழங்கால் வலி

அலோபதி Vs ஆயுர்வேதம் - எது சிறந்தது?

முழங்கால் வலி ஏற்பட்டால் எந்த மருத்துவ முறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. முதலில் எலும்பியல் மருத்துவரை அணுகி, வலிக்கான காரணத்தைக் கண்டறிவதே சரியான அணுகுமுறை. தேவைப்பட்டால் வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர் மருந்துகளையும், பிசியோதெரபியையும் பரிந்துரைப்பார்.

ஆயுர்வேதத்தில் மூலிகை எண்ணெய் மசாஜ் போன்ற சிகிச்சைகள் சிலருக்கு தற்காலிக நிவாரணத்தையும் தளர்வையும் அளிக்கலாம்.‌ ஆனால் அவை மூட்டுத் தேய்மானத்தைச் சரி செய்யும் அல்லது வலி மீண்டும் வருவதைத் தடுக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. எனவே ஆயுர்வேத மையங்களுக்கு செல்ல விரும்பினாலும், முதலில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, தகுதியான நிபுணரிடம் மட்டுமே சிகிச்சை பெறுவது நல்லது. பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை தன்னிச்சையாக நிறுத்தக் கூடாது.

இதையும் படியுங்கள்:
இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? அறிவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
Knee pain  - முழங்கால் வலி

சரி. வலி தாங்க முடியவில்லையா? வலியைக் குறைக்க அன்றாடம் என்ன செய்யலாம்?

தரையில் சம்மணமிட்டு நீண்ட நேரம் அமர்வது, அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்குவது போன்றவற்றை குறைத்துக் கொள்ளலாம். மருத்துவர் அனுமதிக்கும் எளிய தசை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்யலாம். நடைப்பயிற்சியின் போது வலி அதிகரித்தால் ஓய்வெடுக்க வேண்டும். வசதியான காலணிகளை அணிவதும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முழங்கால் மூட்டுகளின் மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.

நடைப்பயிற்சி நல்லது என்பதற்காக வலியையும் பொறுத்துக்கொண்டு நடக்க வேண்டியதில்லை. உடலின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி முழங்கால்களைப் பாதுகாப்போம்.

இந்த பதிவைப் படிக்கும் வாசகர்கள் முழங்கால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள், வலி அதிகரிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டோம்.

மேலும் எந்த அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும், அலோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை எப்படி சரியாக அணுக வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டோம். முழங்கால்களைப் பாதுகாப்போம். ஆரோக்கியமாக இருப்போம்!

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறதா? உடலுக்குள் நடக்கும் விபரீதம்!
Knee pain  - முழங்கால் வலி

Reference: