பாதங்களுக்கு இயற்கை மசாஜ்: ‘பெப்பிள் வாக்’ தரும் அசத்தல் நன்மைகள்!

கூழாங்கற்கள் மீது நடப்பது பாதங்களில் உள்ள முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு சிறந்த இயற்கை முறையாகும்.
Reflexology Walking|பாத அழுத்த சிகிச்சை
Reflexology Walking |பாத அழுத்த சிகிச்சைAI Image
Updated on

வெறுங்காலால் கூழாங்கற்கள் மீது நடப்பது ஒரு சிறந்த இயற்கை அக்குபிரஷர் (Reflexology Walking) பயிற்சியாகும். அதாவது, கூழாங்கற்கள் மீது நடப்பது பாதங்களில் உள்ள முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு சிறந்த இயற்கை முறையாகும். இது பாதங்களில் உள்ள நரம்புப் புள்ளிகளைத் தூண்டி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் உறுப்புகளைச் சீராகச் செயல்பட வைக்கிறது.

மனிதனின் கால் பாதங்களில், உடலின் முக்கிய உறுப்புகளை தூண்டும் புள்ளிகள் உள்ளதாக இயற்கை மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இந்த புள்ளிகளை தூண்ட கூழாங்கற்கள் மீது நடப்பது மிகவும் சிறந்த ஒரு பயிற்சி என்றும், இதன் மூலம் உடல் உள் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும் என்றும் கூறப்படுகிறது.

பெப்பிள் வாக் எனப்படும் கூழாங்கற்களில் நடை என்பது சிறிய, மென்மையான கூழாங்கற்கள் மீது காலணியின்றி நடப்பது ஆகும்.

பொதுவாக பூங்காக்கள், யோகா மையங்கள், நலவாழ்வு மையங்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் கூழாங்கற்கள் நடைபயிற்சி செய்ய தனித்துவமான பாதைகள் அமைக்கப்படுகின்றன. ஒரே சீரான வட்ட வடிவ கூழாங்கற்களை இந்த பாதையில் பதித்து அதன் மேல் சில நிமிடங்கள் நடப்பதை தினமும் கடைபிடிக்கின்றனர்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பாத ரிப்ளெக்சாலஜி என்ற பாத அழுத்த சிகிச்சை செய்பவர்கள், உடல் நலத்தை மேம்படுத்த விரும்பும் முதியவர்கள், காலை நடைப்பயிற்சி செய்பவர்கள், மனஅழுத்தத்தை குறைக்க விரும்புபவர்கள் இதனை முக்கிய ஒரு பயிற்சியாக கடைபிடிக்கின்றனர்.

பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள அழுத்த புள்ளிகள் தூண்டப்படுவதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகிறது. பாதங்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, மன அமைதியும் நரம்பு மண்டல தளர்வும் கிடைக்கும். முதுகு வலி, கழுத்து வலி மற்றும் மூட்டு வலிகள் குறைய இது உதவும்.

இதையும் படியுங்கள்:
கூழாங்கற்கள் வெறும் கல் இல்லை: இவை உங்கள் வாழ்வை மாற்றும் பொக்கிஷம்!
Reflexology Walking|பாத அழுத்த சிகிச்சை

கால்களின் தசை நார்கள் வலுவடைந்து, உடல் சமநிலையை மேம்படுத்தும். கால்களுக்குக் கிடைக்கும் இந்த மசாஜ் மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். கால் வலி, கணுக்கால் வலி மற்றும் ஆடுசதை பிடிப்புகளைக் குறைக்க உதவும்.

இந்த பயிற்சியின் மூலம் பாதத்தசைகள் வலுவடையும். உடல் சமநிலை மேம்படும். கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்; பாதங்களுக்கு இயற்கையான மசாஜ் கிடைக்கும்.

Reflexology Walking|பாத அழுத்த சிகிச்சை
Reflexology Walking|பாத அழுத்த சிகிச்சைAI Image

பொதுவாக கூழாங்கற்கள் மீது நடப்பதால் பாதத்தசைகள் மற்றும் மூட்டுகள் பலம் பெறுகின்றன. உடலின் சமநிலை திறன் மேம்படலாம் என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே கூழாங்கற்களின் மீது வெறும் காலில் நடக்க வேண்டும். நடைபயிற்சிக்கு முன் மற்றும் பின் ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

முதியவர்கள் ஆரம்பத்தில் மென்மையான அல்லது சிறிய கூழாங்கற்களில் நடப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். அதாவது ஆரம்பத்தில் மென்மையான கூழாங்கற்களில் பயிற்சி செய்து, பின்னர் கடினமான கற்களுக்கு மாறலாம். வலி அதிகமாக இருந்தால், காலணிகளுடனோ அல்லது மெல்லிய காலுறையுடனோ நடக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அதிகாலை நடைப்பயிற்சி: உடல் நலத்தை தாண்டி உங்களுக்கு கிடைக்கும் உன்னத நன்மைகள்!
Reflexology Walking|பாத அழுத்த சிகிச்சை

நீரிழிவு பாதிப்பு காரணமாக பாத உணர்வு குறைந்தவர்கள், பாதத்தில் புண் அல்லது காயம் உள்ளவர்கள் கடுமையான நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Benefits and Safety of Reflexology

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
logo
Kalki Online
kalkionline.com