Protein Powder: பாலுடன் கலப்பதா, தண்ணீருடன் கலப்பதா? 

protein powder
protein powder
Published on

உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் தசை வளர்க்க விரும்புபவர்கள் மத்தியில் Protein Powder ஒரு பிரபலமான சப்ளிமெண்ட். தங்கள் அன்றாட புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய இதை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதை தண்ணீருடன் கலப்பதா அல்லது பாலுடன் கலப்பதா என்பதுதான் பலரது சந்தேகமாக இருக்கும். இந்த இரண்டில் எது சிறந்தது என்பது உங்கள் தனிப்பட்ட இலக்குகள், உடல்நிலை மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது. இது குறித்த உண்மை என்ன என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

தண்ணீருடன்: தண்ணீருடன் புரோட்டின் பவுடர் கலந்து குடிப்பதன் முக்கிய நன்மை என்னவென்றால், அது கலோரிகளை உடலில் சேர்ப்பதில்லை. நீங்கள் கலோரிகள் குறைவாக உட்கொள்ள முயற்சிக்கிறீர்கள் என்றாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க இலக்கு வைத்திருந்தாலோ, தண்ணீர் ஒரு சிறந்த தேர்வாகும். இது புரதத்தை வேகமாக உறிஞ்சவும் உதவும். தண்ணீர் கலந்த ஷேக் லேசானதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கும். இது புரதப் பொடியின் சுவையையும் சற்று லேசாக்கும்.

பாலுடன்: பாலுடன் புரதப் பொடியைக் கலக்கும்போது, நீங்கள் கூடுதல் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைப் பெறுகிறீர்கள். இது தசை வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் ஊட்டச்சத்தை வழங்கும். பால் கலந்த ஷேக்குகள் பொதுவாக மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். பாலில் உள்ள Casein புரதம், புரதத்தின் செரிமானத்தை மெதுவாக்கும், இது நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காமல் இருக்க உதவும். இருப்பினும், பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு இது பிரச்சனை ஏற்படுத்தலாம்.

புரதப் பொடியை எதனுடன் கலப்பது சிறந்தது என்பதற்கு ஒரு குறிப்பிட்ட பதில் இல்லை என்பதுதான் உண்மை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைப்பது அல்லது கலோரிகளைக் கட்டுப்படுத்துவது என்றால், தண்ணீர் சிறந்தது. தசை அல்லது உடல் எடையை அதிகரிப்பதே உங்கள் இலக்கு என்றால், கூடுதல் ஊட்டச்சத்திற்காகப் பாலைத் தேர்ந்தெடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
8 வடிவ நடைபயிற்சி... Gen Z-கான சிம்பிள் உடற்பயிற்சி!
protein powder

உடற்பயிற்சிக்குப் பிறகு விரைவான உறிஞ்சுதலுக்குத் தண்ணீர் பரிந்துரைக்கப்பட்டாலும், மொத்த தினசரி புரத உட்கொள்ளலே மிகவும் முக்கியமானது. எனவே, உங்கள் உடலின் தேவைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப எது சிறந்ததோ, அதைத் தேர்ந்தெடுத்து, சீராகப் புரதத்தை உட்கொள்வதே முக்கியம்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி: உண்மை என்ன தெரியுமா?
protein powder

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com