ஏன் ஏகாதசிக்கு மட்டும் விரதம்? மறைந்திருக்கும் நோபல் பரிசு உண்மை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்த உயிரியல் ரகசியத்தை இப்போதுதான் உலகம் கண்டுள்ளது!
Fasting - Autophagy | ஆட்டோஃபேஜி
Fasting - Autophagy | ஆட்டோஃபேஜிAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) செல்கள் தங்களைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆட்டோஃபேஜி (Autophagy) எனும் நிகழ்வை உலகிற்கு வெளிப்படுத்தினார். இந்த அரிய கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆட்டோஃபேஜி (Autophagy) என்பது:

கிரேக்க மொழியில் 'ஆட்டோ' என்றால் 'சுய' என்றும், 'பேஜின்' (Phagein) என்றால் 'சாப்பிடுதல்' என்றும் பொருள். நமது உடலில் உள்ள செல்கள், தங்களுக்குள் இருக்கும் தேவையற்ற, சேதமடைந்த அல்லது நச்சுத்தன்மை உள்ள செல்களை மற்றும் புரதங்களை தாங்களே தின்று அழிக்கும் செயல்முறையே ஆட்டோஃபேஜி ஆகும்.

Autophagy | ஆட்டோஃபேஜி
Autophagy | ஆட்டோஃபேஜிAI Image

ஆட்டோஃபேஜி (Autophagy) செயல்பாடு:

செல்கள் இந்த சிதைந்த பகுதிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை உடைத்து உடலுக்குத் தேவையான புதிய ஆற்றலாகவும், புதிய செல்களை உருவாக்குவதற்கான மூலப் பொருட்களாகவும் மாற்றுகின்றன. இது உடலின் சொந்த மறுசுழற்சி முறையாகும். இதன் மூலம் உடலின் செல்கள் தங்களைத்தானே சுத்தப்படுத்திக் கொள்கின்றன. இந்த மறுசுழற்சி முறை சரியாக நடைபெறாவிட்டால், அல்சைமர்ஸ் (மறதி நோய்), பார்கின்சன், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற பல தீவிர நோய்கள் ஏற்படும். ஆட்டோஃபேஜி செயல்பாடானது, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கவும் உதவுகிறது.

மனித உடலில் ஆட்டோஃபேஜி செயல்முறை மிகக் குறைந்த அளவிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உடலுக்கு சத்துகள் கிடைக்காத போது அதாவது பட்டினி அல்லது உண்ணாவிரதம் இருக்கும்பொழுது இது தீவிரமாகத் தூண்டப்படுகிறது. அறிவியல் ஆய்வுகளின் படி ஒரு நபர் உண்ணாவிரதம் (Intermittent Fasting) அல்லது கலோரி கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் பொழுது, 12 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் உடலை பட்டினி போடும்போது, மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது.

இதையும் படியுங்கள்:
காலையில் மட்டும் குழந்தைக்கு காய்ச்சல் வருகிறதா? பதற வேண்டாம், இதைப் படியுங்கள்!
Fasting - Autophagy | ஆட்டோஃபேஜி

அப்பொழுது உயிர் வாழ்வதற்கான ஒரு போராட்டமாக உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்கு கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் கேன்சரை உருவாக்கக்கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன. இதனால் மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும் எந்த ஒரு மருத்துவ செலவும் இல்லாமல் தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாகப் புத்துணர்ச்சி அடைகிறது. இதுதான் அந்த நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் கண்டுபிடிப்பு.

ஏகாதசி விரதம்:

இதைத்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் தமிழ் சித்தர்கள் 'ஏகாதசி விரதம்' என்ற பெயரில் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஏகாதசி விரதத்திற்கு பின்னால் இந்த மாபெரும் அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது. இந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து 'விரதம்' என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள்.

இதையும் படியுங்கள்:
நரம்பியல் விஞ்ஞானி பகீர் எச்சரிக்கை..! கையால் எழுதுங்கள்; இல்லையெனில் உங்கள் மூளை மங்கிவிடும்..!
Fasting - Autophagy | ஆட்டோஃபேஜி
(மருத்துவ மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை (Disclaimer): இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. இந்த இணையதளத்தில் நீங்கள் வாசித்த தகவல்களைக் கொண்டு, முறையான மருத்துவ சிகிச்சையைத் தவிர்க்கவோ அல்லது தாமதப்படுத்தவோ வேண்டாம். ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது அவசர உதவி மையத்திற்கோ தொடர்பு கொள்ளவும். நாங்கள் எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் தொழில்முறை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பரிந்துரைக்கவில்லை.)
logo
Kalki Online
kalkionline.com