
யோகா நமது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, சருமப் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. சில குறிப்பிட்ட யோகாசனங்கள் (ஆன்டி-ஏஜிங் யோகா) சருமத்தை இளமையாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருக்க உதவுகின்றன. அந்த வகையில் முக அழகைக் கெடுக்கும் இரட்டைக் கன்னம் பிரச்னைக்கு செய்ய வேண்டிய ஏழு யோகா பயிற்சிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
முதுகை நிமிர்த்தி அமருங்கள். உங்கள் வாயை அகலத் திறந்து நாக்கை வெளியே நீட்டுங்கள். மூச்சை விடும் போது சிங்கம் கர்ஜிப்பது போன்று ஒலி எழுப்புங்கள். இதை 5 லிருந்து 7முறை செய்யவும்.
பயன்கள் : உங்கள் கன்னங்களின் கொழுப்பு குறையும். உங்கள் தாடை அழகான வடிவம் பெறும்.
வயிறு கீழே படும்படி குப்புறப்படுத்து, தலையில் இருந்து வயிறு வரை மேலே தூக்கிய நிலையில், கைகளை தரையில் ஊற்றியபடி தலையை நிமிர்ந்து மேலே பார்க்கவும். இந்த நிலையில் 15 நொடிகள் இருக்கவும்.
பயன்கள் : உங்கள் கழுத்து தசைகள் வலுவடையும். உங்கள் உடல் நல்ல நிலையில் இருக்கும்.
கீழே குப்புறபடுத்து பின் கால்கள் இரண்டையும் முதுகை நோக்கி மடக்கி இரண்டு கைகளால் இரண்டு கணுக்கால்களையும் பிடிக்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலை, மார்பு, தொடை ஆகிய பகுதிகளை ஒன்றாக மேலே உயர்த்தி, உடலை வில் போல் வளைத்து மேலே தூக்கியபடி 20 நொடிகள் இருக்கவும்.
பயன்கள் : இரத்த ஓட்டம் சீராகும். கன்னம் பகுதிகளும் நல்ல வடிவம் பெறும்.
கீழே முட்டி போட்டு அமருங்கள். உங்கள் உள்ளங்கையை குதிகாலில் வையுங்கள். முதுகை வளைத்து தலையை மேல் நோக்கி வையுங்கள். 20 நொடிகள் இப்படி இருக்கவும்.
பயன்கள் : உங்கள் தொண்டையை விரிவாக்கும். கன்னக் கொழுப்பை நீக்கும்.
காலை நன்றாக நீட்டி படுத்து உங்கள் உள்ளங்கையை இடுப்பில் வைத்து மார்பை தூக்குங்கள். உங்கள் தலையை பின்னால் மடக்கவும்.
பயன்கள் : இது தைய்ராடு பிரச்சனையை குணமாக்கும். தாடை பகுதி சிறப்பாகும். இது தொண்டை பகுதியை சரிசெய்யும்.
தரையில் உட்காருங்கள். வாய்க்கு மேல் நாக்கை அழுத்தி வையுங்கள். உங்கள் கன்னம் இரண்டையும் உள்ளே இழுத்து 15 நொடிகள் இருக்கவும்.
பயன்கள் : தாடை தசைகளை வலுப்படுத்தும். கன்னத்தைக் குறைக்கும்.
உங்கள் கழுத்தை இடது பக்கமாக சுற்றுக்கள். பிறகு வலது பக்கமாக சுற்றுங்கள். பத்து முறை இப்படிச் செய்யவும்.
பயன்கள் : இரத்த ஓட்டத்தை அதிகரித்து கழுத்து தசைகளை வலுவாகும். மேற்கூறிய யோகாசனங்களால் உங்கள் இரட்டைக் கன்னம் பிரச்சனை நீங்கும்.