உயிரைக் காக்கும் அறிகுறிகள்: உங்கள் உடல் சொல்லும் ரகசியங்கள்!

ஒருசில அறிகுறிகளை நம் உடல் உறுப்புகள் வெளிப்படுத்தினால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
Signs indicating organ damage
Organs | Signs indicating organ damage
Published on

ஒருசில அறிகுறிகளை உடல் உறுப்புகள் வெளிப்படுத்தினால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகளை மேற்கொண்டு அறிகுறிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். என்னென்ன அறிகுறிகள் எத்தகைய பாதிப்பை உணர்த்தும் என்று பார்ப்போம் (Signs indicating organ damage).

மூளை

மறதி, எரிச்சல், சிந்தனை, மந்தம், கவனக்குறைவு ஆகிய அறிகுறிகள் வெளிப்படுத்தும். பேச்சுக்குழப்பம், உடல் ஒருபக்கம் முடக்கம், கடுமையான தலைவலி, நினைவு இழப்பு அல்லது கண் பார்வை இழப்பு ஏற்பட்டால், இது மருத்துவ அவசரநிலை. உடனடி சிகிச்சையானது நிரந்தர மூளை பாதிப்பைக் குறைக்கும்.

தைராய்டு

தைராய்டு பாதிப்பு என்பது தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக (Hyperthyroidism) அல்லது குறைவாக (Hypothyroidism) ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிறது. இது உடலின் செய்பாட்டை கட்டுப்படுத்தி விடும். முக்கிய ஆரம்ப அறிகுறிகள்: காரணமற்ற உடல் எடை மாற்றம், அதிகப்படியான சோர்வு, கழுத்தில் வீக்கம், முடி உதிர்தல், மனநிலை மாற்றங்கள், இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகும்.

இதயம்

தொடர்ந்து சோர்வு, லேசான மார்பு அழுத்தம், மூச்சுத்திணறல், மயக்கம் மற்றும் படபடப்பு போன்றவை பெரிய அளவிலான இதய பிரச்சனைகளுக்கு முன்பு தோன்றும். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, ECG அல்லது எக்கோ போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாரடைப்புக்கு முன் தோன்றும் எச்சரிக்கைகளை அறிவது உயிரைக் காக்கும்.

ரத்த நாளங்கள்

ரத்த நாளங்கள் பாதிப்பு (Vascular Diseases) என்பது கால்கள், கைகள் அல்லது உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் ஆபத்தான நிலையாகும். இது அமைதியாக சேதம் அடையும். கால்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு, ஆறாத புண்கள், மயக்கம், உணர்வு இழப்பு, நடைப்பயிற்சியின் போது வலி, உடற்பயிற்சி செய்ய முடியாமை, கை கால்களில் மரத்துப்போதல் மற்றும் தோல் நிறமாற்றம் (நீலம்/சிவப்பு) போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் வரக்கூடும். ஏதேனும் ஒருசில அறிகுறிகள் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.

வயிறு

வயிறு வீக்கம், அமிலம் மேல் வருதல், ஊட்டச்சத்து குறைபாடு, குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு தோன்றுவது ஆரம்ப அறிகுறிகளாகும். கடுமையான அடிவயிற்று வலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் 5 நாட்களுக்கு மேல் வயிற்று வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கல்லீரல்

கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் தோல்/கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), அதீத சோர்வு, வயிற்று வலி மற்றும் வீக்கம், கால்களில் வீக்கம், கரும்பழுப்பு நிற சிறுநீர், மூளை மந்தம், சரும அரிப்பு மற்றும் பசியின்மை. கல்லீரல் நோய்கள் ஆரம்பத்தில் அறிகுறி இல்லாமல் இருக்கலாம். கடுமையான சேதம் ஏற்பட்ட பிறகே வலி உணரப்படலாம். இந்த அறிகுறிகள் கல்லீரல் சேதமடைந்து (Cirrhosis) இருப்பதைக் காட்டுகின்றன. எனவே உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

பெருங்குடல்

உள் அழற்சி மறைந்து இருக்கும், வயிறு வீக்கம், கடுமையான சோர்வு மற்றும் மலக்குடல் பகுதியில் அசௌகரியம், ஒழுங்கற்ற மலச்சிக்கல் தோன்றும். மீண்டும் மீண்டும் தோல் பிரச்சனை தோன்றும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி, கொலோனோஸ்கோபி (Colonoscopy) போன்ற பரிசோதனைகளைச் செய்வது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
உடலில் இரண்டாம் இதயம் எங்கே இருக்கிறது தெரியுமா?
Signs indicating organ damage

நுரையீரல்

நுரையீரல் பாகங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளான பிறகு தெரியலாம். நுரையீரல் ஆரம்ப பாதிப்பு பொதுவாகத் தொடர் இருமல், மூச்சுத்திணறல் அல்லது மார்பு இறுக்கம், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் மற்றும் அதிகப்படியான சோர்வு ஆகியவற்றால் வெளிப்படும். 8 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், இளைப்பு, மூச்சு வாங்குதல் மற்றும் நாள்பட்ட சளி ஆகியவை நுரையீரலில் உள்ள பாதிப்பைக் குறிக்கும் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

பித்தப்பை

கற்கள் உருவாகும் வரை அமைதியாக இருக்கும். கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்ட பிறகு வயிற்று வலி அதிகமாகுதல், வாந்தி உணர்வு அல்லது அசௌகரியம் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படுதல் போன்றவை பெரும்பாலும் பித்தப்பைக் கல் (Gallstones) அல்லது வீக்கத்தின் பொதுவான அறிகுறிகளாகும்.

சிறுநீரகங்கள்

சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் பெரும்பாலும் ஆரம்பத்தில் தெரிவதில்லை. பல ஆண்டுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும். ஆனால் நோய் முற்றிய நிலையில், கண்கள் வீக்கம், குதிகால் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் மாற்றம் (நுரை, நிறமாற்றம்), கண்களை சுற்றி கருவளையம், முதுகு வலி, குமட்டல் மற்றும் அரிப்பு தோன்றுதல் போன்றவை தான் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலில் இன்சுலின் செய்யும் மாயம்! 
Signs indicating organ damage

அட்ரீனல் சுரப்பிகள்

நீண்டகால மன அழுத்தத்தால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு இதன் செயல்பாட்டை சோர்வடைய செய்யும். சோர்வாக இருந்தும் தூக்கம் வராமல் தவித்தல், காபி பருகும் பழக்கத்தை தவிர்க்க முடியாமை, மதியநேரத்தில் சோர்வு ஆகியவை பொதுவானவை. இவை கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலையின்மையைக் குறிக்கின்றன.

கணையம்

காய்ச்சல், வேகமான இதயத் துடிப்புமற்றும் கணையம் (Pancreas) கடுமையாகப் பாதிக்கப்பட்டால் தோல் மஞ்சள் நிறமாதல் (Jaundice), ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் தென்படும். அதிக இனிப்பு சாப்பிடும் ஆசை வெளிப்படுதல், திடீர் சோர்வு, அடிக்கடி தாகம் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். எண்ணெய் பிசுபிசுப்பான மலம் மற்றும் காரணமில்லாத எடை இழப்பு நாள்பட்ட பாதிப்பைக் குறிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com