இதயத்திற்கு எது பெஸ்ட்? ஸ்ட்ராபெரியா, ராஸ்பெரியா?

Raspberry - Strawberry - இதய ஆரோக்கியம்
Raspberry - Strawberry - இதய ஆரோக்கியம்
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

நம் உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் மிகச் சிறந்தது. இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது ராஸ்பெர்ரியா அல்லது ஸ்ட்ராபெரியா என்பதை இப்பதிவில் காணலாம்‌.

ராஸ்பெர்ரி

ராஸ்பெர்ரியில் அதிக நார்ச்சத்து உள்ளது‌. ஸ்ட்ராபெரியில் அதிக சி சத்து நிறைந்துள்ளன. இரண்டு பெர்ரிகளிலும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. இதில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது‌. ராஸ்பெர்ரியில் அதிக நார்ச்சத்து உள்ளது‌. கொலஸ்டிரால் அளவைக் குறைத்து இதய நோயைத் தடுக்க வல்லது. ஒரு கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளதாக அறியப்படுகிறது‌. இது உங்கள் தினசரி தேவைக்கான 28 சதவீத நார்ச்சத்தை கிடைக்கச் செய்கிறது.

ஆனால் ஸ்ட்ராபெரியில் ஒரு கப்பில் 3 கிராம் அளவு நார்ச்சத்து தான் உள்ளது. இது பத்து சதவீத தினசரி நார்சத்தை கிடைக்கச் செய்கிறது. ராஸ்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெரி இரண்டிலும் கரையாத மற்றும் கரையும் நார்ச்சத்துகள் உள்ளன.

கரையும் நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து கொலஸ்டிரால் அளவை குறைத்து செரிமானத்தை சீராக்கி கொழுப்பை வெளியேற்றுகிறது. நார்ச்சத்து அதிகமாவதால் இரத்த அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது‌. இது இரத்த லிபிட் அளவை குறைத்து இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கிறது‌. மேலும் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது.

நார்ச்சத்து நிறைந்த ராஸ்பெர்ரிகளை உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் கலோரிகள் குறைக்கப்பட்டு எடைக்குறைப்பில் உதவியாக உள்ளது‌. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த இரண்டு பெரிகளிலும் ஆன்தோசயானின் என்ற பாலிபினால் உள்ளதால் ப்ரீராடிகல்களின் அழுத்தத்திலிருந்து திசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

2021 ஆராய்ச்சியின் படி நார்ச்சத்து நிறைந்த உணவின் மூலம் அதிக அளவு இதயம் பிரச்னைகள் குறைக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

இதன் ஆன்தோசயானின் அழற்சியைக் குறைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

Strawberry - இதய ஆரோக்கியம்
Strawberry - இதய ஆரோக்கியம்

ஸ்ட்ராபெரி

இதில் உள்ள சி சத்து சிறந்த ஆன்டிஆக்சிடண்டாகச் செயல்பட்டு ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் நீரிழிவையும் குறைப்பதாக அறியப்படுகிறது‌.

இதையும் படியுங்கள்:
மனப் பதற்றத்தை உடனடியாகக் குறைக்க உதவும் 'Box Breathing' சுவாசப் பயிற்சி!
Raspberry - Strawberry - இதய ஆரோக்கியம்

இரண்டு பெரிகளிலும் சி சத்து இருந்தாலும் ஸ்ட்ராபெரியில் 177 சதவீதம் ராஸ்பெர்ரியை விட அதிக அளவு சி சத்து இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு பெரிளிலும் குறைந்த கலோரிகளே உள்ளன. ராஸ்பெர்ரியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஸ்ட்ராபெரியில் சி சத்து அதிகமாக உள்ளது. இதில் திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பிவைட்டமினும் உள்ளது‌.

இரண்டு பெரிகளையும் உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாகும்‌. இரண்டுமே சிறந்தவைகளமாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகம் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு ராஸ்பெர்ரி சிறந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் உணவில் அதிக பெர்ரிகளை சேர்ப்பதால் அதனுடைய ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, சி சத்து ஃபோலேட் மற்றும் ஆன்தோசயானின்கள் இதய ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைப்பதாக அறியப்படுகிறது. இந்த பெரிகளை நீங்கள் ஸ்மூத்திகள் மற்றும் ஓட்சில் சேர்த்து உட்கொள்வது மிகச்சிறந்த ஆரோக்கியத்தைத் தரும். இவைகள் ஆக்சிடேடிவ் அழுத்தத்தையும் அழற்சியைக் குறைப்பதாலும் நோயெதிர்ப்பு அதிகரிப்பு மற்றும் செரிமானம் சீராகும்.

இதையும் படியுங்கள்:
தீக்காயம் ஏற்பட்டால் செய்யக்கூடாத தவறுகள் - முதல் 5 நிமிட முதலுதவி!
Raspberry - Strawberry - இதய ஆரோக்கியம்

Reference:

logo
Kalki Online
kalkionline.com