
மனபதற்றம் (Stress) என்பது ஒருவரின் மனதில் ஏற்படும் அழுத்தம், சோர்வு, குழப்பம் போன்ற உளவியல் நிலை ஆகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.
மனபதற்றத்திற்கு காரணங்கள்:
வேலை தொடர்பான அழுத்தம், அதிக வேலைச்சுமை, வேலை மீதான பாதுகாப்பின்மை, மேலாளருடன் கருத்து வேறுபாடு, தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்பதகராறுகள் திருமண சிக்கல்கள், சிந்தனைகள் அல்லது பிணைப்புகள், நிதி சார்ந்த கவலைகள், கடன்கள், வேலை இழப்பு, உடல் ஆரோக்கிய பிரச்சனைகள், நீண்டநாள் நோய்கள், தூக்கமின்மை, தன்னம்பிக்கையின்மை அல்லது எதிர்பார்ப்புகளின் அழுத்தம்...
அறிகுறிகள்:
மன அழுத்த அறிகுறிகள்: அதிக சிந்தனை, எதற்கும் ஆர்வமின்மை, சுறுசுறுப்பின்மை மனஅழுத்தம் அல்லது கவலை
உடல் அறிகுறிகள்: தலைவலி, தூக்கமின்மை, வயிற்றுப் பிரச்சனை, சோர்வு,
நடத்தை சார்ந்த அறிகுறிகள்: கடுமையான கோபம், தனிமையடைதல், உணவு பழக்கத்தில் மாற்றம், போதைப் பொருள் சார்பு
தீர்வுகள்:
தியானம் மற்றும் யோகா மனத்தை அமைதிப்படுத்த உதவும், தூக்கத்தை சரியாக பராமரித்தல் வேண்டும். தூக்கமின்மை மனபதற்றத்தை அதிகரிக்கச் செய்யும். தினசரி நடை, ஓட்டம், உடற்பயிற்சி மனநலத்திற்கு நன்மை பயக்கும். நேர நிர்வாத்தை கையாண்டு வேலைகளை முன்னுரிமைப் படுத்தி திட்டமிட்டு செய்யல். நெருக்கமானவர்களுடன் உரையாடுதலை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை பகிர்வது மனம் தளர்வதற்கு உதவும். திறமையான சிகிச்சை செய்து கொள்ளலாம்.
உணவுச் சத்தான பழக்கங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல், சரியான உணவு மனநலத்தை மேம்படுத்தும்.
தேவைப்பட்டால், ஒரு நம்பகமான மனநல நிபுணரை அணுகுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தியானம்
மன பதற்றத்தை குறைக்கும் தியானத்தை 10 முதல் 15 நிமிடம் பயிற்சி செய்வது மன அமைதிக்கு மிக பயனாகும்.
மனபதற்றம் குறைக்கும் தியானம்: 'மூச்சு கவன தியானம்' (Breath Awareness Meditation) செய்வோமா?
படி 1: அமைதியான இடம் தேடுங்கள். தொந்தரவு இல்லாத அமைதியான இடத்தில் உட்காருங்கள். நிமிர்ந்த முதுகுடன் நாற்காலி அல்லது தரையில் கம்பீரமாக உட்காருங்கள்.
படி 2: கண்களை மூடுங்கள். மெதுவாக கண்களை மூடுங்கள். உங்கள் உடலை முழுமையாக தளர வையுங்கள்.
படி 3: மூச்சை கவனிக்க ஆரம்பிக்கவும் எந்தவித கட்டுப்பாடுமின்றி உங்கள் மூச்சைப் போக்கையும் இழுப்பையும் கவனியுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து, மெதுவாக வெளியே விடுங்கள். (உதா: 4 வினாடிகள் இழுத்து, 4 வினாடிகள் நிறுத்தி, 6 வினாடிகள் வெளியே விடுங்கள்)
படி 4: சிந்தனை வந்தால் கவலையில்லை மனதில் சிந்தனைகள் வந்தால், அதை தட்டிக் கேட்காமல் திரும்ப மூச்சுக்கு கவனம் திருப்புங்கள்.
படி 5: சில நிமிடங்கள் தொடருங்கள் இதை 5 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். முடிவில் மெதுவாக கண்களைத் திறந்து, உங்கள் உடலை மெதுவாக அசைத்து எழுங்கள். முடிக்கும்போது “ஓம் சாந்தி சாந்தி சாந்தி” என்று மெதுவாக மனதிற்குள் உச்சரிக்கலாம்.
தினசரி பழக்கமாக்குவது முக்கியம். இதை நாளும் ஒரே நேரத்தில் செய்வது உங்களை மனஅமைதி, நம்பிக்கை, மற்றும் ஆழ்ந்த சிந்தனை நோக்கி அழைத்துச் செல்லும்.