
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க சம்மரில் நாம் மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். இதோ அதற்கான குறிப்புகள்...
1. வயது அதிகரிக்க அதிகரிக்க நம் உடல் பிரச்சனைகளும் அதிகரிக்கும். 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த சம்மர் சீசனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு வெக்கை உபாதைகளைக் கூட அவர்களுக்கு மிகுந்த சிரமத்தையும், தாங்க முடியாத வேதனையும் கொடுத்து விடும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
2. நேரடியாக வெயிலில் வேலை செய்பவர்கள் இந்த சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மயக்கம், சுட்டெரிக்கும் வெயிலினால் சூரியத் தாக்கம் போன்றவை ஏற்படலாம்.
3. குழந்தைகளை வெயிலில் விளையாட ஒரு போதும் அனுமதிக்காதிர்கள். இது அவர்களுக்கு வெக்கை நோயும், உடல் உபாதைகளும் வர காரணியாக அமைந்து விடும் என்பதை இந்த சமயத்தில் மறந்து விடாதீர்கள்.
4. ஒற்றைத் தலைவலி உடையவர்களுக்கும் சுட்டெரிக்கும் இந்த வெயில் காலம் சற்று கடுமையான சமயம் தான்.
5. லோ பிபி. மற்றும் ஹை பிபி உள்ளவர்கள் இந்த சமயத்தில் உங்களின் பிளட் பிரஷரின் அளவு குறையவோ, கூடவோ போய் விடாதபடி பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
6. வீட்டிற்குள் அணியும் செருப்பை, வெளியில் போகும்போது அணியாமல், இந்த சீசனில் மட்டும் பிளாஸ்டிக் செருப்புகள், கடினமான லெதர் செருப்புகள், பாதம் மூடிய ஷூக்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, நுண்துளைகள் அதிகம் இருக்கும் காற்றோட்டமான ரப்பர் செருப்பை அணிந்து செல்லலாம். இது பாதங்களுக்குக் காற்றோட்டத்தை தாராளமாக கொடுக்கும். வியர்வையை அடக்கி வைக்காது. துர்நாற்றத்தையும் ஏற்படுத்தாது.
7. சம்மரில் நீங்கள் பயன்படுத்தும்அனைத்து துணி வகைகளுமே காட்டனாக இருப்பது நல்லது. உடுத்தும் உள்ளாடை, மேலாடையில் ஆரம்பித்து, படுக்கை, தலையணை, துண்டு என அனைத்தையும் காட்டனாக பயன்படுத்தினால் சம்மரில் ஏற்படும் பல பிரச்னைகளை தவிர்க்கலாம். வியர்வை, நம் சருத்துக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தும், குறிப்பாக தோல் நோய்கள்.
காட்டன் துணிகளை பயன்படுத்தினால் சருமத் தொற்றுகள் வருவதை தவிர்க்கலாம்.
8. பாதாம் பிசினை ஒரு மணி நேரம் தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்தாலே, ஜெல் போன்று மாறிவிடும். இதில் பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை போட்டுக் குடிக்கலாம். இதுவெயிலால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
9. வெயிலில் போய்விட்டு வந்த பின் நம்மில் பலருக்கும் முகம் அப்படியே கறுத்துப் போகும். இந்தக் கருமையை அகற்ற, கொஞ்சம் இளநீருடன், அதில் பாதியளவு பால் கலந்து, முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடத்துக்கு பிறகு முகம் கழுவினால் கருமை அகலும்.
10. ‘அனிமியா’ எனக்கூடிய ரத்தசோகை நோய் உள்ளவர்கள் சம்மர் சமயத்தில் கவனமாக உடம்பை பாதுகாக்க வேண்டும்.
11. இந்த சுட்டெரிக்கும் வெயில் சமயத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
12. தாகம் எடுத்தாலும், இல்லையென்றாலும் நிறைய தண்ணீர் அருந்துதல் வெக்கை நோய்கள் வராமல் நம் உடலை பாதுகாக்கும்.