கோடைகால அவஸ்தைகளை அடித்து விரட்டும் ஆப்ரிகாட் பழம்!

தினமும் 2 ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.
apricots
Apricots
Updated on

நறுமணமும் இனிப்பும் நிறைந்த, பொன்-ஆரஞ்சு நிற ஆப்ரிகாட் பழங்கள், ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட மற்றொரு கோடைக்காலச் சிறப்புப் பழமாகும். ஆரோக்கிய நலனுக்காக பெரிதும் போற்றப்படும் இந்தப் பழங்களை முதன்முதலில் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்த கிரேக்கர்கள், இவற்றுக்கு “சூரியனின் பொன் முட்டைகள்” என்று பெயரிட்டனர்.

ஆப்ரிகாட் (அ) சர்க்கரை பாதாமி எனப்படும். இது கொத்துப்பேரி இனத்தை சேர்ந்தது. பழங்களிலேயே அதிக வைட்டமின் டி சத்து உள்ள பழம். நமது உடலில் தோன்றும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது வைட்டமின் டி சத்து குறைபாடு தான் காரணம் என்கிறது ஆய்வுகள்.

ஆப்ரிகாட் பழம் அதிக பீட்டா கரோட்டின் சத்து நிறைந்த பழம். இது பிரி ரேடிக்கல் (Free Radicals) பாதிப்பிலிருந்து நமது உடலை கோடை கால வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு கண்களை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

பீட்டா கரேட்டின் தான் நமது உடலின் மூலம் உடல் நலனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ 'யை உருவாக்கும். இதுதான் சரும பராமரிப்பு மற்றும் சருமம் சார்ந்த புற்றுநோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.

இந்த பழத்தை தினமும் எடுத்து கொள்ளும் பொழுது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் தினமும் 2 ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.

கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இந்த காலகட்டத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) நிறைந்த ஆப்ரிகாட் பழத்தில் ஃபிளவனாய்டு மற்றும் கனிமங்கள் உள்ளன. இவை, இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.

ஆப்ரிகாட் பழத்தில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவியாக இருக்கிறது. அத்துடன் குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அபாயத்தையும் குறைக்கிறது.

வைட்டமின் ஏ-வின் சிறந்த மூலமாக ஆப்ரிகாட் பழம் உள்ளது. இந்த வைட்டமின் கண்கள் மற்றும் கருவிழிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட கண் நரம்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இதன் காரணமாக கோடைக்கால அதிகப்படியான சூரிய ஒளியிலிருந்து கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தூங்கச் செல்லும் முன் ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவது நல்லதா?
apricots

மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி ஆப்ரிகாட் பழத்தில் அதிகம் காணப்படுகிறது என்றாலும் பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அல்சைமர் உள்ளிட்ட மூளை பிரச்சனைகளையும் கட்டுக்குள் வைக்கிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

கோடை காலத்தில் நீர்சத்து குறைபாட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். ஆப்ரிகாட் பழத்தை சாப்பிடும் ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவது குறைவாக இருக்கும். ஏனெனில் ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை சீராக பேணுகிறது.

வைட்டமின் பி12 நிறைந்த உலர் பழங்களில் ஆப்ரிகாட் பழமும் ஒன்று. கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சோர்வை போக்கும் ஆற்றல் மிக்கது வைட்டமின் பி12. அதோடு இது குறிப்பாக கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்கவும் ஆப்ரிகாட்களை உட்கொள்ளலாம்.

ஆப்ரிகாட்டில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஒரு கப் ஆப்ரிகாட் பழங்களில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரை கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலர் ஆப்ரிகாட் – சத்தும் சுவையும் சேர்த்த ஆரோக்கியப் பொக்கிஷம்!
apricots

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள் எனில் புதிய பழங்களை எடுத்துகொள்வது அன்றாட நீர்ச்சத்தை பூர்த்தி செய்ய உதவுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இரத்தத்தை பம்ப் செய்வது இதயத்துக்கு சற்று கடினமாக இருக்கும்.

ஆப்ரிகாட் பழத்தில் கலோரிகள், கொழுப்புகள் குறைவாக உள்ளது. இந்த பழத்தை டயட்டில் இருப்பவர்கள் அவர்களின் உணவில் எடுத்துக் கொள்ளலாம். புரதம் நிறைந்த பழங்களில் ஒன்று ஆப்ரிகாட். இந்த பழங்கள் மூன்று சாப்பிட ஒரு கிராம் புரதம் சத்து கிடைக்கும். ஆப்ரிகாட் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. தினமும் இரண்டு போதுமானது.

ஆப்ரிகாட் பழம் வாங்கும் போது நல்ல உறுதியாக இருக்கும் பழமாக வாங்க வேண்டும். மென்மையான பழங்கள் விரைவில் தனது சத்துக்களை இழந்துவிடும். நல்ல ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும் (மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் குறைவாக இருக்க வேண்டும்). இனிய நறுமணம் வீச வேண்டும். கோடைக்காலத்தில் கிடைக்கும் புதிய ஆப்ரிகாட்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com