
பொதுவாக டீ பேக் என்று அழைக்கப்படும் தேநீர் பைகள் மிகவும் நாகரீகமானதாகவும் சுத்தமானதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் தேநீர் பைகள் தீங்கு விளைவிக்கின்றன. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தேநீர் பைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் ஒரு புதிய ஆய்வின் படி தேநீர் பைகளில் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மில்லியன் கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தேநீர் பைகளின் வெளிப்புற உறையில் பாலியஸ்டர், நைலான்-6, பாலிப்ரொப்பிலீன் மற்றும் செல்லுலோஸ் போன்ற மோசமான பிளாஸ்டிக் பொருட்கள் சேர்த்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சூடான பால் மற்றும் சூடான நீரில் தேநீர் பைகளை வைக்கும்போது, அவற்றுக்குள் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் அதன் இழைகள் உருகி தேநீருடன் கலக்கின்றன. இந்த பிளாஸ்டிக் கூறுகள் குடல் செல்களுக்குள் நுழைந்து, இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றன. இதனால் குடல் விரைவிலேயே பாதிப்படைகிறது. இரத்தமும் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன.
தேநீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் இரத்தத்தின் வழியாக இதயத்தில் கலந்து மூளை மற்றும் நரம்பியல் மண்டலத்தை பாதிக்கிறது. அதில் உள்ள நானோ பிளாஸ்டிக் கூறுகள் குடலில் புற்று நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக உள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குடலில் குவிந்து செரிமான அமைப்பை பாதிக்கும். தேநீர் பைகளில் இருந்து நானோபிளாஸ்டிக் கசிந்து உடலில் சேர்ந்து செரிமான அமைப்பு மற்றும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. இதனால் குடல் அழற்சி நோய் ஏற்படும். வயிறு புண், வயிறு உப்புசம், குடல் புண் ஆகியவை உருவாகிறது.
தேநீர் பைகள் சுத்தம் மற்றும் சுகாதாரமாக நாகரீகமாக தோன்றினாலும், அவற்றில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோபிளாஸ்டிக்ஸ் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தேநீர் பைகள் மட்டுமல்ல, பிளாஸ்டிக் கப்புகளில், மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களிலும் தேநீர் அல்லது சூடான பானம் அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.
பாரம்பரிய முறையில் தேநீர் பருக பழகிக் கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியம். அதுவே பாதுகாப்பு.