50 வயதிலும் 25 வயது தோற்றம்.. தளபதி விஜய்யின் சூப்பர் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

கடின ஜிம் அல்ல, ஒழுங்கான நடைப்பயிற்சி, லைட் வெயிட் ட்ரெயினிங், போதிய தூக்கம், தண்ணீர் குடிப்பு ஆகிய எளிய பழக்கங்களால் 50 வயதிலும் இளமை ததும்பும் ஃபிட்னஸை காப்பாற்றும் தளபதி விஜய்
thalapathy vijay fitness
thalapathy vijay fitness
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போது தீவிர அரசியலிலும் களமிறங்கியுள்ள தளபதி விஜய், தனது 50வது வயதிலும் ஒரு இருபது வயது இளைஞருக்கு நிகரான சுறுசுறுப்புடன் வலம் வருகிறார். இவரை திரையில் பார்க்கும் பலருக்கும் இவ்வளவு இளமையாக இருக்க என்னதான் செய்கிறார் என்ற ஆச்சரியம் தோன்றுவது வழக்கம். 

இதற்காக அவர் ஏதோ பெரிய மாயாஜாலம் செய்கிறார் என்றோ அல்லது நாள் முழுவதும் உடற்பயிற்சிக் கூடம் உள்ளேயே கிடக்கிறார் என்றோ நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல், தினசரி வாழ்க்கையில் அவர் பின்பற்றும் சில சுலபமான பழக்கவழக்கங்கள் தான் இந்த வயதிலும் அவரை இவ்வளவு அழகாகக் காட்டி வருகிறது. அப்படி அவர் என்னதான் செய்கிறார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கடினமான பயிற்சிகள் கிடையாது!

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அவர் எப்போதுமே தன்னைத் வருத்திக்கொண்டு கடினமான விஷயங்களை செய்வது கிடையாது. தினமும் காலை பத்து முதல் நாற்பது நிமிடங்கள் வரை மெதுவான நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செய்வதை தனது வழக்கமாக கொண்டுள்ளார். அதன் பிறகு மிதமான எடைகளை தூக்கி பயிற்சி செய்கிறார். 

உடலை சிக்ஸ் பேக் போல பெரிதாக காட்ட வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல. மாறாக, எலும்புகளையும் தசைகளையும் வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளவே அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதைத்தான் அவரது தனிப்பட்ட பயிற்சியாளரான நரேஷ் குமாரும் பெருமையாக கூறுகிறார்.

வீட்டு சாப்பாடு தான்!

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்ற ஒரு மாயை மக்களிடம் உள்ளது. ஆனால் விஜய் இதை முற்றிலும் தவிர்க்கிறார். காலை உணவாக நமது ஊர் ஸ்பெஷலான இட்லி, முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் இளநீர் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகிறார். 

மதிய உணவில் அளவான சாதம், காய்கறிகள் மற்றும் மீன் அல்லது சிக்கன் என ஒரு முழுமையான சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறார். இரவு நேரங்களில் மிகவும் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய சூப் மற்றும் சலாட் போன்றவற்றை மட்டுமே உண்கிறார். எந்த ஒரு தேவையற்ற வெளி உணவுகளையும் அவர் தொடுவதே இல்லை.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’..!பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் எடுக்கும் அதிரடி வியூகம்..!
thalapathy vijay fitness

எங்கும் எதிலும் சுறுசுறுப்பு!

விஜய் அவர்கள் ஜிம்முக்கு செல்ல முடியாத நாட்கள் வந்தால், படப்பிடிப்பு தளம் போன்ற இடங்களில் கூட தனக்கு கிடைக்கும் சிறு இடைவெளிகளில் நடப்பது, உடலை ஸ்ட்ரெட்ச் செய்வது என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறார். 

வெளிநாடுகளுக்கு அல்லது வெளியூர்களுக்கு பயணம் செய்யும்போது கூட இந்த பழக்கத்தை அவர் கைவிடுவதில்லை. தொடர்ந்து ஒரே மாதிரியான கட்டுப்பாடான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான் அவரது இந்த அசாத்திய எனர்ஜிக்கு முக்கிய காரணம்.

இந்த வயதிலும் இப்படி ஒரு அசாத்தியமான உடலமைப்பை பராமரிக்க மிக முக்கிய காரணம் அவரது மனக்கட்டுப்பாடு தான். ஒரு நாள் மட்டும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்துவிட்டு மறுநாள் தூங்குவதை அவர் விரும்புவதில்லை. 

தினமும் சீராக செயல்படுவது தான் நீண்ட கால பலனை தரும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். தண்ணீர் அதிகம் குடிப்பது, உடலுக்கு தேவையான ஓய்வை கொடுப்பது என ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்கிறார். அதனால்தான் திரையில் அவர் அவ்வளவு அழகாக காட்சியளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஊடகங்கள், சீரியல்கள் பார்த்தால் மரண தண்டனை! ரத்தத்தை உறைய வைக்கும் சட்டங்கள்! எங்கே?
thalapathy vijay fitness

ஃபிட்னஸ், நமது அன்றாட வாழ்வியலோடு ஒன்றிப்போக வேண்டிய ஒரு பழக்கம். சரியான உணவு, சீரான உடற்பயிற்சி மற்றும் தொடர்ச்சியான மனக்கட்டுப்பாடு ஆகிய இந்த மூன்றையும் ஒரு பேலன்ஸ்டு ஆக கொண்டு சென்றாலே எந்த வயதிலும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ முடியும் என்பதை தளபதி விஜய் நமக்கு மிக அழகாக உணர்த்தியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com