
வெரிகோஸ் (Varicose veins) என்பது நம் தோலில் அடிப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் வீங்கி முறுக்கிக் கொண்டு நீண்டு காணப்படும். இது பெரும்பாலும் கால்கள் முழங்கால்கள் கணுக்கால் இவற்றில் ஏற்படும். ரத்த நாளத்தில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ரத்தம் கால்களில் தேங்கி நரம்புகளை பாதித்து வீங்க தொடங்கும். பாதத்தில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்த வால்வுகள் பாதிக்கப்படும்போது அந்த இடங்களில் வீக்கம் ஏற்படுகிறது.
இதன் மூலம் தோலில் வலி வீக்கம் கணுக்கால் வலி போன்றவை ஏற்படும் அதிக உடல் எடை, உடல் பருமன், புகைபிடித்தல், மரபணு மாற்றங்கள் ஆகியவை மூலம் நரம்புகள் சுருட்டி கொண்டு முடிச்சு போட்டு காலில் வலி வேதனை ஏற்படுத்தும்.
ரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. பலருக்கு வலி வேதனை போன்றவை இருக்காது அவர்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். பெரிதுபடுத்த மாட்டார்கள். இதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும்.
இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களுக்கு வெயின் என்று பெயர். நம் உடம்பில் பெருங்குடல் ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போன்று அமைந்துள்ளது. இது புடைத்தல் வீங்குதல் போன்றவை மூலம் மலச்சிக்கல் ஏற்பட காரணமாகிறது. மலச்சிக்கல் தான் இதற்கு முக்கிய காரணம். ஒரே இடத்தில் நின்று கொண்டு வேலை செய்வது ஒரு வேலையும் செய்யாமல் அமர்து கொண்டிருப்பது போன்ற செயல்களால் ரத்த ஓட்டம் தடைபடும்.
பாதத்திலிருந்து இதயத்திற்கு ரத்தம் எடுத்து செல்லும்போது அதிக விசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது ரத்த நாளங்கள் ரத்தம் தங்கி வீக்கம் அடைகிறது. நம் உடலுக்கு அதிக அசைவு நடைபயிற்சி உடல் உழைப்பு அவசியமாக உணரப்படுகிறது. பாதத்தில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது இந்த வெரிகோஸ் ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு வெரிகோஸ் பிரச்சனை ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. கணுக்கால் பாதங்களில் அரிப்பு, நிறம் மாறுதல் போன்றவை இதன் அறிகுறிகள்.
இதனை வருமுன் காப்பது நல்லது. இதற்கு அறுவை சிகிச்சை தீர்வாகாது. ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்தால் மீண்டும் வேறு இடத்தில் இந்த வீக்கம் வரும். இந்த வெரிகோஸ் நரம்பு பிரச்சனைக்கு சித்தா ஆயுர்வேதம் போன்றவற்றில் சிறப்பான தீர்வு கிடைக்கும். அவர்கள் இதனை ஆயில் மசாஜ் மூலமாகவும் இயற்கை மருந்துகள் மூலமாகவும் இதனை திறம்பட குணப்படுத்தி வருகிறார்கள்.
மீண்டும் கூறுகிறேன் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும். ஒரே இடத்தில் நின்று கொண்டோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் இருக்க வேண்டாம். கூடுமானவரை உடற்பயிற்சி நடை பயிற்சி அவசியம்.