

எனக்கு இந்த 'Taste' (சுவை) பத்தின சயின்ஸ் மேட்டரெல்லாம் பெருசா தெரியாதுங்க. ஆனா, எதார்த்தமா சில நாட்கள்ல காலையில ஆசையா சாப்பிட்ட அதே சாப்பாடு, மதியம் அல்லது நைட் டைம்ல சாப்பிடும்போது அதோட டேஸ்ட் கொஞ்சம் வேற மாதிரி மாறுறதை நானும் ஃபீல் பண்ணியிருக்கேன். சரி, நிஜமாவே இந்த உலகத்துல அப்படி ஏதாச்சும் நடக்குமா; இல்ல இது என்னோட வெறும் கற்பனைதானான்னு நெட்ல தேடிப் பார்த்தப்போதான் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சுது. ஏன்னா, இது ஏதோ நம்ம மனப்பிராந்தி கிடையாதுங்க, இதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியல் காரணமே ஒளிஞ்சிருக்காம்.
நம்ம உடம்போட 'டேஸ்ட் பீல்' நாள் முழுக்க ஒரே மாதிரி இருக்காம நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கிட்டே இருக்கும்னு ரிசர்ச் சொல்லுது. 'சர்க்காடியன் ரிதம்' (Circadian rhythm) அப்படின்னு நம்ம உடம்புக்குள்ளேயே ஒரு ‘நேச்சுரல் கிளாக்’ ஓடிக்கிட்டு இருக்குனு Cleveland Clinic வெப்சைட்ல ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க. இதுதான் நம்ம தூக்கம், முழிப்பு, ஹார்மோன் சுரக்குறது எல்லாத்தையும் கவனிச்சுக்குது.
இந்த ‘கிளாக்’ காலையிலிருந்து நைட் வரைக்கும் மாறிக்கிட்டே இருக்கறதுனால, நம்ம மூளை சுவையை உணர்ர விதமும், நம்ம எச்சில் சுரக்குறதும் நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறும்.
சுவைங்கிறது வெறும் நாக்கு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லைங்க; அது நம்ம மூளை, எச்சில், முக்கியமா நம்ம மூக்கோட மோந்து பாக்குற திறமை (Smell) என்று எல்லாமே சேர்ந்த ஒரு கூட்டு மேஜிக். ஆக்ஸ்போர்டு அகாடமி Nutrition Reviews இதப்பத்தி என்ன சொல்றாங்கன்னா, ஒருத்தர் நல்லா ஆக்டிவா இருக்குற நேரத்துலதான் அவங்களோட சுவை திறமை ரொம்ப அதிகமா வேலை செய்யுமாம்.
இதோட இன்னொரு சுவாரஸ்யமான உண்மை என்னன்னா, நம்ம சுவை உணர்வுக்கு நம்ம மூக்கோட வாசனை திறமையும் ரொம்ப ரொம்ப அவசியம். அமெரிக்க தேசிய நல்வாழ்வு நிறுவனத்தோட 'என்.ஐ.எச்/பி.எம்.சி (NIH/PMC) ரிசர்ச் ரிப்போர்ட்ல' சொல்றபடி, இந்த பாடி கிளாக்னால காலையிலயும், மதியத்துலயும் நம்ம மூக்கோட வாசனை திறன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும், நைட்ல கொஞ்சம் குறையுமாம்.
இதனாலதான், பல பேருக்கு காலையில் கொஞ்சம் லேட்டா, இல்ல மதியத்தோட ஆரம்பத்திலயும் சாப்பாடு செம ருசியா, பிரெஷ்ஷாகூடத் தெரியுமாம். ஏன்னா அப்போதான் நம்ம கண்ணு, மூக்கு, நாக்கு எல்லாமே செம ஆக்டிவா வேலை செய்யுமாம். ஆனா நைட் டைம்ல டயர்ட் ஆகுறதால சுவை கொஞ்சம் கம்மியா தெரியுமாம்.
ஆனா, ஒரு முக்கியமான விஷயம் மக்களே! சாப்பாட்டோட டேஸ்ட் மாறுறதுக்கு இந்த பாடி கிளாக் மட்டும் காரணம் இல்ல; நமக்கு சளி பிடிச்சிருந்தாலோ, வாய் உலர்ந்து (Dry) இருந்தாலோ, இல்ல சில மருந்துகள் சாப்பிட்டாலோ கூட டேஸ்ட் மாறும். அப்படி எந்தப் பிரச்னையும் இல்லாம எதார்த்தமா மாறுதுனா அது நம்ம ‘பாடி கிளாக் மேஜிக்தான்!’.
சோ, சாப்பாடு ஒரே மாதிரி இருந்தாலும்... அத நம்ம உடம்பு ஏத்துக்குற விதம் நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறுதுங்கிறதுதான் நிஜம்! எனவே இனிமேல் நீங்கள் சாப்பிடும்போது இந்த நேர வித்தியாசத்தை கவனித்துப் பாருங்க. நாம டெய்லி சாப்பிடுற சாப்பாட்டுல கூட இவ்வளவு பெரிய சயின்ஸ் ஒளிஞ்சிருக்குங்கிறது பார்த்தீர்களா! நம்ம பாடிக்குள்ள இருக்குற இந்த ‘நேச்சுரல் கிளாக்’ பண்ற ஒரு மேஜிக்தான் இது!
உண்மையிலே செம இன்ட்ரஸ்டிங்கா இருக்குல. சோ, நம்ம ஹெல்த்தை சூப்பரா பார்த்துக்க இந்த மாற்றங்கள புரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம்.
அதனால, நல்ல ஹெல்தியான சாப்பாட்டை கரெக்டான டைம்க்கு ரசிச்சு என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க. அதுதான் நம்ம உடம்புக்கு எப்பவுமே ரொம்ப நல்லது. டேஸ்ட்டான சாப்பாட்ட எப்பவுமே மிஸ் பண்ணாம விரும்பி சாப்பிடுங்க மக்களே.
(Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான அறிவியல் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. சுவை உணர்வில் திடீரென ஏதேனும் நீடித்த மாற்றங்கள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.)