
குளிர் மாதங்களில் சளி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் வருவது சகஜம்தான். குளிர் மற்றும் வறண்ட காற்று நோய்யெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம்.
நுரையீரல் நிபுணர் டாக்டர் மைக்கேல் ஷார்ஃப் கருத்துப்படி, குளிர்ந்த காற்றை சுவாசிப்பது மூச்சுக்குழாய் எரிச்சல் மற்றும் இருமலை ஏற்படுத்தும். உங்களுக்கு ஆஸ்துமா அல்லது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) இருந்தால், குளிர்ந்த காற்று 'இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும்.'
ஏசி அறையில் அதிகநேரம் இருப்பது சுவாச ஆரோக்கியத்தை பாதிக்கும். நடு இரவில் நீங்கள் நடுங்கி எழும் அளவுக்கு குளிர்ச்சியாக இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, தெர்மோஸ்டாட்டைக் (Thermostat) குறைந்து விடாமல், வெப்பநிலையை சிறிது உயர்த்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் குளிரை நன்றாக உணரும்போது அதை மாற்ற மறக்காதீர்கள்.
நாள் முழுவதும் இயங்கும் சென்ட்ரல் ஏசி சிஸ்டம் கொண்ட அலுவலகங்கள் போன்ற குளிர்ச்சியான சூழலில் அதிக நேரம் செலவிடும்போது சிலர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். இந்த நிலை 'ஏர் கண்டிஷனிங் நோய்' என்று அழைக்கப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது இருமல் இருக்கும்போது குளிரூட்டப்பட்ட அறையில் தூங்குவது உங்கள் சுவாச ஆபத்தை அதிகரிக்கும். மேலும் உங்கள் நோய்த்தொற்று அறிகுறிகளை மோசமாக்கும். ஏர் கண்டிஷனரில் இருந்து வரும் குளிர்ந்த காற்று உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம்; உங்கள் சுவாசக் குழாயில் உள்ள இரத்த நாளங்களை கட்டுப்படுத்தலாம். இது உங்கள் உடல் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும்.
உங்கள் ஏர் கண்டிஷனர் சரியாக பராமரிக்கப்படாவிட்டால், அது காற்றில் பரவும் வைரஸ்களை பரப்பலாம். ஏர் கண்டிஷனர்களில் ஃப்ரீயான் போன்ற குளிர்பதனப் பொருட்கள் இருக்கலாம், அதை சுவாசிப்பது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் ஏர் கண்டிஷனரில் உள்ள Mold சுவாச பிரச்சனைகளை மோசமாக்கும் மற்றும் இருமலை ஏற்படுத்தும். ஏர் கண்டிஷனர்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஊறிஞ்சி விடுவதால் இது தொண்டை எரிச்சலுக்கு வழிவகுக்கும்.
சாதாரணமாக, ஏர் கண்டிஷனர்கள் நோயை ஏற்படுத்தாது. அவை தூசி மற்றும் பாக்டீரியாவைப் பரப்புவதற்கு பங்களிக்க முடியும் என்றாலும், நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகளுக்கு அவை நேரடியாகப் பொறுப்பேற்காது. ஆனால், சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகளுடன் நீங்கள் வீட்டிற்குள் ஏர் கண்டிஷனர் அறையில் அதிக நேரத்தை செலவிடும்போது, அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அசுத்தமாக அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் ஏர் கண்டிஷனிங் யூனிட்கள் வறண்ட சருமம், ஜலதோஷம், காய்ச்சல், ஒவ்வாமை, டான்சில்லிடிஸ், இருமல், ஆஸ்துமா அறிகுறிகள் மற்றும் சுவாசப் பாதை நோய்த்தொற்றை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் ஏசியை நீங்கள் சரியாக பராமரித்தால் நீங்கள் நீண்ட நேரம் ஏசி அறையில் இருந்தாலும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.