1113 luxury houses sold for 7200 crores.  
பொருளாதாரம்

3 நாளில் 7200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1113 ஆடம்பர வீடுகள்!

க.இப்ராகிம்

3 நாளில் 7200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1113 ஆடம்பர வீடுகள்.

இந்தியாவின் பிரபல ஆடம்பர வீடுகளை கட்டி விற்பனை செய்யும ரியல் எஸ்டேட் நிறுவனமாக திகழ்வது டி எல் எப் நிறுவனம். இந்நிறுவனம் குருகிராமில் 25 ஏக்கர் பரப்பளவில் 7 கோபுரங்கள் கொண்ட 14 பேண்டஸி ஹவுஸ் அப்பார்ட்மெண்ட் களை கட்டி உள்ளது. ஒரு வீட்டினுடைய பரப்பளவு 3500 சதுர அடிகளாகவும், இவ்வாறு 1,113 பிளாட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆடம்பர வகை வீடுகளுக்கு 6.25 கோடியும் முதல் 7.5 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேண்டஸி ஆடம்பர வீடுகளுக்கு 11 கோடி முதல் 14 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இவற்றை வாங்க இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களிடம் கடுமையான போட்டி நிலவியது. இதனால் 3 நாட்களில் 7200 கோடி ரூபாய்க்கு அனைத்து வீடுகளும் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

அதே பகுதியில் நிறுவனத்திற்கு சொந்தமான 116 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தின் சில பகுதிகள் ஒரு சதுர அடி 18 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றின் மூலம் 700 கோடி ரூபாய் வணிகம் கடந்த ஆண்டு நடைபெற்ற இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

வெளிநாட்டில் பல கோடிகள் சம்பளம் வாங்கும் இந்தியர்கள் தாய்நாடான இந்தியாவில் சொந்த வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆர்.என்.ஐ கஸ்டமர்கள் எங்களிடம் அதிகம் இருக்கின்றனர். மேலும் இடம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இந்திய மக்கள் வாழ்க்கையின் பெரும் பகுதி உழைத்த பெரும் தொகையை செலவு செய்கின்றனர்.

இவ்வாறான செலவை பயன் தரும் வகையில் ஆக்க எங்கள் நிறுவனம் தரமான இல்லங்களை அமைத்துத் தந்து வருகிறது. இதன் வெளிப்பாடு விரைவான விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT