8 Businesses suitable for women to do from home!
8 Businesses suitable for women to do from home! 
பொருளாதாரம்

வீட்டிலிருந்து பெண்கள் செய்ய ஏற்ற 8 பிசினஸ்!

க.இப்ராகிம்

வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

1. இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.

2. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

3. சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.

4. வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

5. தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்‌. தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

6. மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

7. தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.

8. மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் விட்டு வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT