RBI Retail Direct 
பொருளாதாரம்

Retail Direct Scheme - அரசாங்க பத்திரங்களில் நேரடி முதலீடு - RBI வெளியிட்ட ஆப்..!

சங்கீதா

முதலீடு செய்ய வேண்டுமா? RBI வெளியிட்ட ஆப்..!

நம் அனைவருக்கும் நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும், அரசு சார்ந்த பத்திரங்கள் அதாவது மத்திய அரசு பத்திரங்கள், மாநில அரசு பத்திரங்கள், ட்ரஷரி பத்திரங்கள், போன்ற அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு அனைவருக்கும் ஆசை இருக்கும். 

இது போன்ற அரசாங்க பத்திரங்களில் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் பணக்காரர்களாக இருந்தால் தான் முதலீடு செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் சாமானியர்களும் இனி அரசு கடன் பத்திரங்களில் வீட்டில் இருந்தபடியே முதலீடு செய்து கொள்ளலாம். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சில்லறை நேரடித் திட்டம்.

இந்த Retail Direct Scheme என்பது சில்லறை முதலீட்டார்கள் அரசாங்க பத்திரத்தில் நேரடியாக முதலீடு செய்வதற்காக அமல்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒருவர் அரசாங்க பத்திரங்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம். இந்தத் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் அரசு பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்ய தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தில் எந்த ஒரு இடைத்தரகர்களும் இல்லாமல், நேரடியாக முதலீடு செய்து கொள்ளலாம். 

முன்பெல்லாம் அரசு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு நாம் வங்கி அல்லது பரஸ்பர நிதிகள் போன்ற இடைத்தரகர்களை அணுக வேண்டியிருக்கும். ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லாமல் நேரடியாக அரசாங்க பத்திரங்களில் நாம் இந்த சில்லறை நேரடி திட்டத்தின் (Retail Direct Scheme) மூலம் முதலீடு செய்து கொள்ளலாம்.

அதேபோன்று முன்பெல்லாம், அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு  'டிமேட்' என்ற கணக்கு தேவைப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆர்பிஐ அறிவித்திருக்கும் இந்த சில்லறை நேரடி திட்டத்தின் மூலம், ஒரு தனி நபர் முதலீட்டாளர், அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு இந்த 'டிமேட்'  கணக்கு தேவைப்படாது. 

ஆனால் அதற்கு பதிலாக கடந்த 2021 ஆம் ஆண்டு சில்லறை நேரடி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்பிஐ வெப்சைட்டில் ஆர்பிஐ 'கில்ட்' என்ற கணக்கை மட்டும் தொடங்கி கொள்ள வேண்டும். இந்த கில்ட் கணக்கு மூலம் அரசு பத்திரங்கள் வாங்குவதும், விற்பனை செய்வதும் பதிவு செய்யப்பட்டு வரும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பிரைமரி மற்றும் செகண்டரி மார்க்கெட்டின் மூலம், அரசாங்கத்தின் புதிய பத்திரங்கள் மற்றும் பழைய பத்திரங்களை வாங்கி, விற்க முடியும். இது 'கில்ட்' கணக்கில் பதிவு செய்யப்படும்.

அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்கள் இதுவரை இணையதளத்தின் (Website) மூலம் மட்டுமே பத்திரங்களில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் இந்த முதலீட்டு பழக்கத்தை சுலபமாக்கும் வகையில் மொபைல் மூலமாக செயலி ஒன்றை ஆர்பிஐ கொண்டுவர முடிவு செய்திருந்தது. 

அதன் விளைவாகத்தான் ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ரீடைல் டைரக்ட் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இணையதளத்தின் வழியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வந்தது சிக்கலாகவும், அதேசமயம் நேரத்தை செலவழிப்பதாகவும் இருந்ததால், இனி மொபைலில் RBI Retail Direct ஆப்  மூலம் எளிமையாக முதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் எளிமையாக கணக்கு ஒன்றை தொடங்கி, மூதலீடு செய்யலாம்.

எதில் முதலீடு செய்யலாம்?

  • அரசு பத்திரம் (Government bond) 

  • இறையாண்மை தங்கப் பத்திரம் (sovereign gold bond)

  •  RBI பத்திரங்கள் (RBI bonds)

  •  டி-பில்கள் (T-Bills)

மொபைல் App-ல் இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால், அந்த திட்டத்தை பற்றிய வட்டி, அதற்கான முதிர்வு காலம் என அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். முதலீட்டாளர்களுக்கு எது தேவைப்படுமோ அதனை தேர்வு செய்து முதலீடு செய்துக்கொள்ளலாம்.

கனவில் எந்த விலங்கு வந்தால் என்ன பலன் தெரியுமா?

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

SCROLL FOR NEXT