Uttar Pradesh Economy.
Uttar Pradesh Economy. 
பொருளாதாரம்

பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் உத்திரபிரதேசம்!

க.இப்ராகிம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உத்திரபிரதேசத்துடைய பங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் உத்தரபிரதேசத்தினுடைய பொருளாதார நிலை மேம்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுவது.

இந்தியாவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட முதல் மாநிலமாக இருப்பது உத்திர பிரதேசம். ஆனால் உத்தரப்பிரதேசம் இந்திய பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலே இருந்து வந்தது. இவ்வாறு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை செலுத்தும் மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், 2வது இடத்தில் தமிழ்நாடும், 5வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு இருப்பதாக soic.in நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்திய நாட்டின் உற்பத்தி மற்றும் பங்கு முதலீடுகளை வகுப்பாய்வு செய்து வரும் நிறுவனமான soon.in வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது, இந்தியாவில் தற்போது குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டிருக்கிறது. குறிப்பாக 15.7 சதவீத ஜிடிபி உடன் மகாராஷ்டிரா மாநில முதல் இடத்தையும், 9.2 சதவீத ஜிடிபி உடன் உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இதனால் தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. தமிழ்நாட்டில் 9.1 சதவீத ஜிடிபியும், குஜராத்தில் 8.2 சதவீத ஜிடிபியும், மேற்குவங்க மாநிலத்தில் 7.5 சதவீத ஜிடிபியும் கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

‌உத்திர பிரதேசத்தின் இந்த கணிசமான வளர்ச்சிக்கு காரணம் நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு. இதன் மூலம் 40 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் திரட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

SCROLL FOR NEXT