சின்னத்திரை / OTT

90’S கிட்ஸ் ஃபேவரைட் ஷோ சக்திமான்: விரைவில் திரைப்படமாக வெளியாகும் என அறிவிப்பு!

கல்கி

இந்தியாவில் 90-களில் வெளியாகி, குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த  ஃபேவரைட் டிவி சீரியல் சக்திமான் ஷோ. இப்போது இந்த சீரியல் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது;

இந்தியாவில் 90-களில் வெளியாகி குழந்தைகளின் ஃபேவரைட் ஷோ வாக இருந்தது சக்திமான் தொடர். இதுபோன்ற  சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகெங்கும் எப்போதும் மவுசு உண்டு. ஆகவே இத்தொடரை சினிமாவாக எடுக்கத் தீர்மானித்தோம்.

அந்த வகையில் சக்திமான் மூன்று பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

-இவ்வாறு சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் ஹாலிவுட் தரத்திலான இந்தியன் சூப்பர் ஹீரோவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணிகளை எப்படி கண்டறிவது?

கோதுமை எல்லோருக்கும் தெரியும். ஆரோக்கியம் மிகுந்த மரக்கோதுமை பற்றித் தெரியுமா?

இயற்கை முறையில் தூக்கம் வர உதவும் நட்மெக் மில்க்!

ஒரே வாரத்தில் முகத்தை பளபளப்பாக்கும் டாப் 6 உணவுகள்!

அழகோடு ஆரோக்கியம் காக்கும் செம்பரத்தம் பூ!

SCROLL FOR NEXT