சின்னத்திரை / OTT

அழகிய’ தமிழ்’ மகள்! நியூஸ் ரீடர் நித்யாவின் 1 டஜன் பதில்கள்!

கல்கி

– ஜிக்கன்னு.

''இந்த நிமிஷம் வாழ்க்கை ஆனந்தம்.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த நிமிஷத்தை வாழ்ந்து முடிச்சிடணும்…'' – பாஸிட்டிவாக பேச ஆரம்பிக்கிறார்..நித்து என்கிற நித்யா.. சன் நியூஸ் சேனலின் இளமை பட்டாசு.. தமிழை மென்று கடித்து முழுங்காமல்..பட பட வென்று  இயல்பாக செய்திகளை வாசிக்கும்..நித்யா ஓரு பொன் மாலைப் பொழுதில்.. கல்கி ஆன்லைனுக்காக பேசினார்…

நித்யா எப்படிப்பட்டவர்?

சாதாரண தமிழ் பொண்ணு! தியாகராயர் நகர் சாரதா வித்யாலயா ஸ்கூல்.. எத்திராஜ் காலேஜ் என்று கலகலப்பான மெட்ராஸ் பெண் பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்த அழகான நாட்கள் அழகானவை (பிளாஷ்பேக்கில் மூழ்கி மீண்டார்). நான் ரொம்ப எமோஷனல்..சென்டிமென்டல்…பேமிலி அட்டாச்டு துறு துறு..பொண்ணு. தட்ஸ் ஆல்! (இயல்பாக சிரிக்கிறார்).

மீடியாவுக்குள் எப்படி வந்தீர்கள்?

என் தமிழ் மூலமாகத்தான்! நான் நேசிக்கும் தமிழ்தான் என்னை ஊடகத்திற்குள் கைபிடித்து அழைத்து வந்தது..பள்ளியில் தமிழ் மீடியம்.. கல்லூரியில் தமிழில் நிகழ்ச்சியில் முதல் ஆள் என்று தமிழ் வளர்த்தேன்.. என் தமிழ் உச்சரிப்பும் நன்றாக இருக்கும் என்பதால் ஆசிரியர்களின்.சாய்ஸ் நித்யா தான்..அந்த ஆர்வம்தான் மீடியாவுக்குள் என்னை கொண்டு வந்து விட்டது. ஆரம்பத்தில் Ndtv hindu..கேப்டன் டிவி.. நியூஸ் 18, தந்தி தொலைக்காட்சி..என்று ஒரு ரவுண்டு.. வலம் வந்தேன். ஒவ்வொரு சேனல்களிலும்..புதுப்புது அனுபவங்கல் மூலம் நிறைய கற்று கொண்டேன்..

என்ன விதமான அனுபவங்கள்.. சொல்லுங்களேன்?

ஒய் நாட்..? தாராளமாக.. தந்தி டிவியில் நேஷனல் நியூஸ் என்று.. இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கினேன்.. மற்ற சேனல்களில் வராத செய்திகளாக பார்த்து பார்த்து சேகரித்து வழங்கியதில் நல்ல ரேட்டிங்…நித்யாவின் திறமையை இந்த உலகம் அறிந்து கொண்ட மிகவும் அழகான தருணங்கள் அவை! அதேபோல

நியூஸ் 18 சேனலில்.. மூன்று நிமிட ஸ்டோரிஸ் செய்துள்ளேன்..கிட்டத்தட்ட..100 ஸ்டோரிஸ்.. ஒரு சப்ஜெக்ட் தேர்வு செய்து.. அதன் வீச்சு மாறாமல்.. மூன்றே மூன்று நிமிடங்களுக்குள் தர வேண்டும்.. வேலை நேரம் முடிந்த பிறகு இதை செய்தேன். நித்யாவின் திறமை கொடி கட்டி பறந்த நேரம். Hard work never fails என்பார்கள்.. அதை நேரடியாக உணர்ந்தேன்.

இந்நிகழ்ச்சி லைவ் ரிப்போர்ட்டிங்கில் நிறைய சமூக அவலங்களை ..சில நல்ல விஷயங்களை வெளியே கொண்டு வந்த நிகழ்ச்சி.. மனதார எல்லோரும் பாராட்டினார்கள். இப்போது சன் நியூஸ் சேனலிலும்..செய்தி வாசிப்பதோடு தொகுத்து வழங்குவது, 5 நிமிட பேட்டி.. மகர விளக்கு.. கந்தசஷ்டி லைவ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியது என்று வேற லெவல் அனுபவம்.

பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளீர்களா?

ஓ… (கண்கள் விரிகிறது நித்யாவுக்கு) கீர்த்தி சுரேஷ்.. செப் தாமு என்று பெரிய லிஸ்ட் உண்டு. செஃப் தாமு நிறைய கற்று கொடுத்தார்.. கீர்த்தி சுரேஷிடம் பெரிய நடிகை என்ற பந்தா துளியும் கிடையாது.. ஸ்டைல், ஃபேஷன் விஷயத்தில் நிறைய டிப்ஸ் கொடுத்தார்கள்

 சீரியல்.. சினிமா..என்று ரவுண்டு கட்டுகிறீர்கள் போல?

விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளேன்.. பூவே பூச்சூடவா தொடர் என் நடிப்பு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தது.. சிவா மனசுல சக்தி என்ற விஜய் டிவி தொடரிலும் எனக்கு நல்ல விமர்சனங்கள்.

சின்னத்திரை ஒகே..பெரிய திரை?

'"வாழ்'" படத்தில் ஏனக்கு யதார்த்தமான கேரக்டர்.. பலரின் பாராட்டை அள்ளியதில்..மனசெல்லாம் சந்தோஷம்.. அடுத்து ஒரு பெரிய பேனர் படம் கமிட் ஆகியுள்ளது.

நித்யாவுக்கு சமைக்க தெரியுமா?

சாப்பிட மட்டும் இல்லை.. அருமையாகவும்..சுவையாகவும் சமைப்பேன்..மீன் குழம்பும் தோசையும் உலக பேமஸ்… பிரியாணி.. பீட்சால்லாம் பொளந்து கட்டுவேன்.

நித்யா..ஒரு Style queen-ன்னு சேனல் வட்டாரங்களில் பேசுகிறார்களே… இன்ஸ்டாகிராமிலும் பாலோயர்ஸ்..மத்தியில் பயங்கர craze…?

(லக..லக.என்று சந்திரமுகி ஸ்டைலில் சிரிக்கிறார்.. நித்யா).

அது என்னமோ தெரியவில்லை.. சின்ன வயசுல இருந்தே டிரெஸ்ஸிங் சென்ஸ்.. உண்டு.. ஆள் பாதி.. ஆடை பாதி..இல்லியா.. அதுதான்.. உடைகளைப் பார்த்து பார்த்து செலக்ட் செய்வேன்..Indian, Western என்று எல்லா outfit-ம்..அளவு வச்ச தச்ச மாதிரி பொருந்திவிடும்.. Simple மேக்கப் தான்.

 டான்ஸ் அசத்தலா ஆடுவிங்களாமே?

இதுவும் சின்ன வயசு ஈர்ப்பு தான்…கொஞ்சம் சோர்வா இருக்கும் போது ரெண்டு ஸ்டெப்ஸ்.. அவ்வளவுதான்.. நார்மலாயிடுவேன்.

உங்கள் அழகின் ரகசியம்?

அதுதான் ரகசியம் ஆச்சே  எப்படி வெளியே சொல்றது? ம்.. சரி.. சொல்றேன்.. வேப்பிலை.. மஞ்சள்.. வெந்தயம்.. இதுதான்  எனது அழகின்..ரகசியம்..(இதழோரம் புன்னகை)

காதல்.. கீதல்..?!

ஆஹா.. வம்புல மாட்டாம விட மாட்டிங்க போல..(செல்லமாய் கோபித்து கொண்டார்).. உண்மையை சொல்ல வேண்டும் என்றால்… உழைப்புதான் என் காதலன்..காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது.. பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது.. சொந்த காலில் நிற்க வேண்டும் என்று திருமண நிகழ்வுகளில்..வரவேற்பாளராக சென்றேன்… கல்லூரி முடிந்த மறுநாளே வேலைக்கு வந்துவிட்டேன்..சொந்த காலில் நிற்பது இனிமையான அனுபவம்..சந்தோஷமாக இருக்கிறது.

சக்சஸ் பார்முலா?

பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது.. நம் காலில் நாம் நிற்க வேண்டும்.. இதுதான் நித்யா ஜெயித்த கதை.

-என்ற அந்த அழகிய தமிழ் மகளைக் கைகுலுக்கி விடை பெற்றோம்

யாரெல்லாம் பற்களுக்கு க்ளிப் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

தாழ்வு மனப்பான்மையை தூக்கிப் போடுங்கள்!

உங்களுக்கு கிவி பழம் பிடிக்குமா? அட, இத தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்கப்பா! 

அந்த ஒரு வார்த்தைதான் 728 படங்கள் நடித்ததற்கு காரணம் - நடிகர் குமரிமுத்து வாழ்க்கையை திருப்பிப்போட்ட சம்பவம்!

முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக் கொள்வோம்!

SCROLL FOR NEXT