பில்லா
பில்லா 
வெள்ளித்திரை

16 ஆண்டுகளை நிறைவு செய்த பில்லா.. தெறிக்கவிட்ட அஜித்.. கொண்டாடும் ரசிகர்கள்!

விஜி

ஜித்தின் பில்லா திரைப்படம் இன்றுடன் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையடுத்து அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

அஜித், நயன்தாரா,நமீதா, பிரபு, சந்தானம், ரஹ்மான் நடிப்பில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி 2007ஆம் ஆண்டு வெளியான படம் தான் பில்லா. இயக்குனர் விஷ்ணு வரதன் இந்த படத்தை இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

1978ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் டான். அதை தமிழில் 1980ம் ஆண்டு பில்லா என்று மறு ஆக்கம் செய்ய ரஜினிகாந்த் நடிப்பில் பட்டையை கிளப்பியது. இந்த படங்களுடைய மறு தொடக்கம் தான் அஜித் நடிப்பில் வெளியான பில்லா. மறு தொடக்கமாக இருந்தாலும் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு படத்தின் நடிகர்கள் கூட்டணி பில்லா படத்தை சிறந்த வெற்றி படமாக்க வழிவகுத்தது. நடிகர் ரஜினியின் பில்லாவை விட, அஜித்தின் பில்லாவிற்கு மவுசு அதிகம்.

நடிகர் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன்னர் வாலி, அட்டகாசம், சிட்டிசன், வில்லன், வரலாறு, படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தாலும் பில்லா படத்தில் வில்லத்தனமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தார். பில்லா படம் அஜித்தின் நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படமும் கூட. இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு பலரையும் கவர்ந்தது போல நயன்தாராவின் நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்திற்காக அஜித், நயன்தாரா தமிழ் சினிமா சார்பாக FilmFare சிறந்த நடிகர், நடிகை விருதுக்கு தகுதி பெற்றனர்.

20 கோடி பட்ஜெட்டில் உருவான பில்லா திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி வரை வசூலித்தது. அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க கிட்டத்தட்ட 65 கோடி வரை பில்லா திரைப்படம் வசூலித்தது. வரலாறு படத்திற்கு பிறகு அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த படம் தான் பில்லா. அதன் பிறகு அஜித் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வந்தாலும் இன்றும் பில்லா படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஃபேவரைட் தான்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT