Actress Keerthy suresh father G. Suresh Kumar 
வெள்ளித்திரை

விஜய்யை சீண்டிய கீர்த்தி சுரேஷ் தந்தை.. விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!

விஜி

விஜய்யின் லியோ படம் குறித்து நெகட்டிவாக பேசி நடிகர் விஜயின் ரசிகர்களை சீண்டியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையான ஜி.சுரேஷ்குமார்.

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் விஜய். இவர் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அரசியலிலும் களமிறங்க தயாராகி வருகிறார். தமிழகத்திற்கு அடுத்ததாக கேரளாவில் தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும் நிலையில், லியோ படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து கொண்டே வருகிறது. இதனால் தான் லோகேஷ் கனகராஜும் சோஷியல் மீடியாவில் இருந்தே விலகினார் என்றும் கூட கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட நடிகர் சைன் டாம் சாக்கோ அவர்கள் நடிகர் விஜய் குறித்து மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இவர் பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தை கேலியாக பேசி இருந்தார். இதற்கு காரணம், இவருக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காததனால் தான் இப்படி பேசுகிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷின் தந்தை விஜய்யை சீண்டியுள்ளார். அவர் பேசிய வீடியோ வைரலாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதில், லியோ திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எப்படி ஒரே ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறாரோ தெரியவில்லை. இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT