'கேப்டன் மில்லர்' திரைப்படம், ஓடிடியில் வெளியாகி 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
தனுஷ் நடிப்பில் பல சர்ச்சைகளை தாண்டி பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார்.
கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார். இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.
எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா, பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.
சிவராஜ் குமார் - தனுஷ் நடிக்கும் காட்சி இந்தியர்களை சுட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி.வி பிரகாஷ் பழங்குடியினர் இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார்.
இந்த படம் அமேசான் ப்ரைமில், வெளியாகி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது ட்ரெண்டாகி வருகிறது. வெளியான முதல் வாரத்திலேயே, உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
இந்தியா மட்டுமல்லாது, தான்சேனியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போன்ற நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி வெளியான இப்படத்தின் இந்தி பதிப்பு, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் நம்பர் 1 படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் முதல் இடத்தில் உள்ளது.