Delhi Kumar Arvind Swamy father
Delhi Kumar Arvind Swamy father 
வெள்ளித்திரை

அரவிந்த சாமி தத்துகொடுக்கப்பட்டது ஏன்? நிஜ தந்தை டெல்லி குமார் சொன்னது என்ன?

பாரதி

பிரபல நடிகர் அரவிந்த் சாமி சினிமாவில் அறிமுகமான புதிதில் தனது உண்மையான தந்தை டெல்லி குமார் என்று கூறினார். ஆனால் அவர் கூறியதற்கான எந்தவித சாட்சியும் அப்போது இல்லை. அந்த சமையங்களில் டெல்லி குமாரும் அது சம்பந்தப்பட்ட பேச்சுகளை எடுக்கவே இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லி குமார் சமீபத்தில் இதனைப் பற்றி வாய்த் திறந்தார். அதாவது அரவிந்த் சாமி தன்னுடைய மகன் என்றும் அவர் பிறந்த உடனே தன் தங்கைக்கு தத்தெடுத்துக் கொண்டார் என்றும் கூறினார்.

மேலும் அரவிந்த் சாமி எதாவது முக்கியமான விழாக்களுக்கு மட்டும் தன் வீட்டுக்கு வந்துப்போவார் என்றும் கூறினார். அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை டெல்லி குமார் என்று தெரிந்தப் பிறகு அவர் யாரென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமல்லவா?

டெல்லிகுமார் 1942ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சீரியல் பிரியர்களுக்கு நிச்சயம் இவரைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. சீரியல் நடிகராகவும் திரைப்பட நடிகராகவும் உலா வந்த இவர் 81 வயதாகியும் நடிப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. இவர் 1997ம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட ‘பிரேமி’, ‘நிம்மதி உங்கள் சாய்ஸ் 2’ என்ற தொடர்கள் மூலம் அறிமுகமானார். அடுத்த ஆண்டே விஜய் டிவி மற்றும் ராஜ் டிவியில் ஒளிப்பரப்பான ‘காசளவு நேசம்’ என்ற தொடரில் நடித்தார்.

பின்னர் பிரபல தொடர்களான ‘சித்தி’ தொடரில் மகாலிங்கம் கதாப்பாத்திரத்திலும் ‘மெட்டி ஒலி’ என்ற தொடரில் சிதம்பரம் கதாப்பாத்திரத்திலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் அவர் சீரியல் தொடர்களில் இன்னும் வலம் வர காரணமாயிற்று. ஆம்!

‘ஆனந்தம்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘விளக்கு வச்ச நேரத்துல’, ‘முந்தானை முடிச்சு’, ‘பார்த்த நியாபகம் இல்லையோ’, ‘பொம்மலாட்டம்’, ‘ரெங்கவிலாஸ்’, ‘தலையணைப் பூக்கள்’, ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ போன்ற நாடகங்களில் நடித்தார். இப்போது சன் டிவியில் ஓளிப்பரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ தொடரில் பெரிய சுந்தரம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் டெல்லி குமார் 1974ம் ஆண்டு வெளியான ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தில் அறிமுகமானார். 2001ம் ஆண்டு வெளியான ‘டும் டும் டும்’ படம், 2002ம் ஆண்டு வெளியான ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’, 2010ம் ஆண்டு வெளியான ‘சிங்கம்’; சிங்கம் 2, சண்டை, பாய்ஸ், சாமுராய், வீராப்பு, போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இவர் தன் வாழ்நாளில் 16 திரைப்படங்களிலும் 29 நாடகங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் டெல்லி குமார் 2000ம் ஆண்டு வெளியான ‘காக்கைச் சிறகினிலே’ படத்தில் கே.விஷ்வனாத் நடித்த கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

சீரியல் நாடகம் என்றால் ஒரு நாடகம் இரண்டு வருடங்கள் வரைக் கூட ஓளிப்பரப்பாகும். அப்படிப்பட்ட நாடகத்திற்காகவே தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்ட இவர் சன் குடும்பம் நடத்திய 2012ம் ஆண்டு ‘மெட்டி ஒலி’ நாடகத்திற்காக வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வாங்கினார். அதேபோல் 2018ம் ஆண்டு ‘மகாலெக்ஷ்மி’ நாடகத்திற்காக சிறந்த மாமனார் விருது வாங்கினார். பின் 2019ம் ஆண்டு சன் குடும்பம் நடத்திய விருது விழாவில் ‘பாண்டவர் இல்லம்’ நாடகத்திற்காக சிறந்த தாத்தா என்ற விருதை வாங்கினார்.

இப்படி நடிப்பிற்காக தனது வாழ்க்கை முழுவதும் அற்பணித்த டெல்லி குமாரின் மகன் அரவிந்த் சாமி, நடிப்பில் புலியாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லையே.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT