Dhanush's 50th film 'Raayan': blood-stained first look poster https://www.youtube.com
வெள்ளித்திரை

தனுஷின் 50வது படம் ‘ராயன்’: ரத்தக்கறையுடன் மிரட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஜி

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் 50ஆவது படத்துக்கு, ‘ராயன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில், அண்மையில் வெளியான, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் தனுஷின் 50வது ப்டத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயகுனராக தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். தனுஷின் இயக்கத்தில் அவரே நடிக்க உள்ள அவருடைய 50வது படத்துக்கு தற்காலிகமாக ‘தனுஷ் 50’ எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூர்மையான கருவியுடன் ரத்தக்கறை படிந்த உடையுடன் தனுஷ் நிற்கிறார்.

கேப்டன் மில்லருக்காக நீளமாக முடி வளர்த்திருந்த நிலையில், புதிய படமான ராயன் படத்தில் அச்சுறுத்தும் தோற்றத்திற்காக தலைமுடியை ஷார்ட்டாக வைத்து, மொட்டை கெட்டப்பில் டெரராக மிரட்டியிருக்கிறார். அவருக்கு பின்னால் கையில் கத்திகளுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இருக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்பட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தான் இயக்கிய முதல் படமான, ‘பவர் பாண்டி’யில் காதலை சொன்ன நடிகர் தனுஷ், தனது அடுத்த படமான ராயனில் அதிரடி ஆக் ஷனை கையாண்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் நாடகம் என்று யூகங்கள் உலா வந்தன. பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, ​​ஊகங்கள் உண்மையாகி வருகின்றன.  ராயன் படத்துக்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT