Kalaignar karunanidhi 
வெள்ளித்திரை

கலைஞரின் எந்திரன் பட ரிவ்யூ..!

விஜி

எந்திரன் திரைப்படம் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரேடுத்தவர் ஷங்கர். 90-களில் வெளியான ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து காதலன், இந்தியன், முதல்வன், பாய்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். இதில் முதன் முதலாக அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்த படம் சிவாஜி. 2007-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது.

சிவாஜி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் எந்திரன். முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த இந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால், கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரூ300 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியன் 3 படமும் வரும் என கூறப்பட்டுள்ளது. நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு படம் எடுத்த ஷங்கருக்கு இது பெரிய ஹிட்டை கொடுக்கவில்லை. நடிகர் கமலுக்கும் விக்ரம் படம் அளவிற்கு இந்த படம் வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து 3வது பாகம் ஹிட்டடிக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர், ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்டு இருக்கிறது. இயக்குனரின் அபாரமான கற்பனையும், ஒளிப்பதிவாளர் கேமராவை கையாண்ட முறையும், ரஜினிகாந்தின் மாறுபட்டு நடிப்பும் அருமையாக இருக்கிறது என்று கலைஞர் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

அதிகமாக டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!

மூட்டு வலி மற்றும் வீக்கத்துக்கு முடிவு கட்ட முன்னெடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

SCROLL FOR NEXT