இளையராஜா என்றாலே நமக்கு நினைவில் வருவது இசைதான். அவரது இசைக்கு ஈடு இணையே இல்லை என்றே சொல்லலாம். பண்ணபுரத்தை சேர்ந்த இளையராஜா, இன்று பார்க்கடல் வரையிலும் தனது இசைப்புகழை பரப்பியிருக்கிறார். அப்படிபட்ட இளைஞராஜா ஒரு சிறந்த போட்டோகிராபர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
2014அம் ஆண்டு போட்டோகிராபர் இளையராஜா எடுத்த புகைப்படங்கள் கோவை ஜென்னி கிளப்பில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இளையராஜா ஒரு போட்டோகிராபரா என வியப்பில் ஆழ்ந்தனர். அத்துனை கலைநயத்துடன் அவர் எடுத்த புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து அப்போது பேசிய இளையராஜா, தனக்கும் பாரதிராஜாவுக்கும் சிறுவயது முதலே ஓவிய போட்டி நடைபெறும் என்றும் ஓவியத்தின் மீதுள்ள காதல் தான் தன்னை புகைப்பட கலைஞராக மாற்றியது எனவும் தெரிவித்துள்ளர்.
மேலும்,“கேமராவை பற்றிய சிறு தெளிவு கூட இல்லாமல், அன்றைய காலத்து கேமராவில் பிடித்த அனைத்தையும் படம்பிடித்து வருவேன். அது ஆக சிறந்த புகைப்படமாக இருக்கும் என பலரும் தெரிவிப்பார்கள். என்னிடம் அனைத்து லென்ஸ்களும் இருந்தன. இந்த புகைப்படங்கள் அனைத்தும் 79ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டவை. டிஜிட்டல் கேமரா வந்த பிறகு தான் புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டேன். அது வரைக்கும் நான் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன்.
Ilayaraja clicksஇந்த படங்கள் அனைத்தையும் பிரிண்ட் போட்டு ரசித்து கொண்டு தான் இருந்தேனே தவிர, இசையளவிற்கு புகைப்படங்களை வெளி கொண்டு வரவில்லை. இவை அத்தனையும் ஒரு இருட்டறையில் கிடந்தது. இசையில் நாட்டம் அதிகரித்ததால் புகைப்படம் எடுப்பது மங்கிவிட்டது. ஆனால் இருட்டறையில் கிடந்த இந்த புகைப்படங்களை தேனி கண்ணனும், வின்செண்ட் அடைக்கல ராஜும் சேர்ந்து தான் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர்” என பெருமையாக தெரிவித்தார்.
யாரும் பார்த்திடாத இளையராஜாவின் போட்டோ ஸ்கில்ஸ் நம்மையே வாய்பிளக்க செய்கிறது. போட்டோகிராப் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் சில்ஹவுட், Panning, ஃப்ரீசிங் போன்ற அட்டகாசமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.