ஜெயிலர்
ஜெயிலர் 
வெள்ளித்திரை

ரஜினி ரசிகர்களுக்கு குட்நியூஸ்.. ஜெயிலர் ஓடிடி தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

விஜி

ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. நடிகர் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தனர், இந்த நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். படத்தில் மேலும் ஒரு மெருகு போல இசையில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத்.

இப்படி பலரும் தங்களது பங்களிப்பால் ஜெயிலரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும், எந்த தளத்தில் என பலரும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காகவே வந்தாச்சு குட்நியூஸ்.

ஜெயிலர் திரைப்படம், ஓடிடியில் 2 தளங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அவற்றில் ஒன்று நெட்ஃபிக்ஸ், மற்றொரு தளம் எது என்ற தகவல்கள் உறுதியாக தெரியவில்லை. மேலும், செப்டம்பர் 7 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஜெயிலரை பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே, ஜெயிலர் 375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

SCROLL FOR NEXT