Soappu Seeppu Kannadi 
வெள்ளித்திரை

நாகேஷின் அபார நடிப்பில் ‘சோப்பு, சீப்பு, கண்ணாடி’ திரைப்படக் காட்சி உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்!

வாசுதேவன்

முன்னேற துடிப்பவர்களுக்கு கண்களும், காதுகளும் அலெர்ட்டாக இருக்க வேண்டும் என்பார்கள். கற்றுக்கொள்வது என்பது எப்பொழுதும் இருக்க வேண்டும். ஆர்வமும், திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய மனோபாவமும் தேவை. எந்த நிகழ்விலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு, இந்தச் சினிமா காட்சி உதாரணம்.

‘சோப்பு, சீப்பு, கண்ணாடி’ என்ற காமெடி படத்தில் நாகேஷ், A வீரப்பன் (‘கரகாட்டக்காரன்’ பேமஸ் வாழைப் பழக் காட்சி நகைச்சுவை எழுதியவர்) உசிலை மணி, டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் சம்மந்தப்பட்டக் காட்சி. நாகேஷும், A வீரப்பனும் தண்ணீரில் விழுந்த உசிலை மணியை காப்பாற்ற போய், அவர்களுக்கு, அவரது நிறுவனத்தில், நேர்முக தேர்வில் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டுகிறது. வீரப்பன் டிரைவர் வேலைக்கு, கேட்கப்பட்டக் கேள்விக்குச் சரியாக பதில் கூறுவார். சைக்கிளுக்கு (Bicycle) எவ்வளவு வீல் (சக்கரம்) என்பது கேள்வி. வந்த எல்லோரும் இரண்டு என்று கூற, இவர் நான்கு என்று கூறி அது எப்படி என்று விளக்குவார். இவரது சாதுர்யமான பதில் மற்றும் அவர் கூறிய விதம் உசிலை மணியைக் கவர்ந்துவிடும். வீரப்பன் செலக்ட் ஆகிவிடுவார். மேம்படுத்தப்பட்ட அறிவின் முக்கியத்துவம் (Importance of updated knowledge) இங்கு வெளிப்படும்.

நாகேஷ் சேல்ஸ்மன் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் கையில் ஒரு பேப்பரில் வரிசையாக அந்த நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்கள் ஜபிதா (லிஸ்ட்) கொடுத்து, அதே வரிசையில் கூற வேண்டும் என்பார்கள். தயாரிக்க நேரம் அளிக்கப்படும். அனைவரும் படித்து மனதில் சொல்லி பார்த்துக்கொள்வார்கள். சேல்ஸ்மன் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வந்து இருக்கும் அனைவரும் பதற்றத்துடன் காணப்படுகையில் நாகேஷ் மட்டும் பதற்றமே இல்லாமல் இருப்பார். நாகேஷ் மட்டும் கொஞ்சம் படித்துவிட்டு மேலும் படிக்காமல், அந்த அறையைச் சுற்றும்முற்றும் பார்ப்பார். அங்கு சுவற்றில் ஒரு போர்ட்டில் இந்த லிஸ்ட்டின் ஐயிட்டங்கள் அப்படியே எழுதப்பட்டு இருக்கும். வந்தவர்களால் சரி வர பதில் கூற முடியாது.

நாகேஷ் முறை வந்ததும், தன் கவனிப்பு திறன் (observation skill ) மற்றும் மனதின் இருப்பு திறன் (presence of mind) உடன் செயல்படுத்தும் முறை (implementation) ஆகியவற்றை உபயோகித்து, நிறுவனத்தின் முதலாளி உசிலை மணியை அந்த போர்டு இருக்கும் சுவர் பக்கம் நிற்க வைப்பார். மேலும், பேச்சு திறமையை (communication skill) சரிவரப் பயன்படுத்தி, உசிலை மணியின் பக்கத்தில் நின்றுகொண்டு இருக்கும் அவர் மகனாக நடித்த டைப்பிஸ்ட் கோபுவை (அவர் அந்த போர்ட்டில் எழுதியிருக்கும் ஐயிட்டங்கள் லிஸ்டை மறைத்துக்கொண்டு இருப்பார்) அவர்களை இடம் மாற்றி நிற்க வைத்து விட்டு, போர்டைப் பார்த்து வரிசையாகப் படித்து, உசிலை மணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, வேலையைப் பெறுவார். இவ்வளவையும், அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாமல் கச்சிதமாகவும், கேஷுவலாகவும் செய்வார், நாகேஷ். பார்த்து மகிழ்ந்து, நிறைய கற்றுக்கொள்ள உதவும் காட்சி. அனுபவம் கற்றுக் கொடுக்கும். கவனிப்புத் திறன் (Observation skill). தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது (Facing with self confidence).

மனதில் இருப்புத் திறன் (Presence of Mind). பேச்சுத் திறமை (Communication skill). சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது (Changing according to the need of the environment). செயல்படுத்தும் திறமை (Timely implementation). மேம்படுத்தப்பட்ட அறிவின் முக்கியத்துவம் (Importance of updating knowledge) ஆகியவை வாழ்க்கையில் சாதிக்க உதவும். இந்த விஷயத்தை இத்திரைப்படக் காட்சி மிக நன்றாக நமக்கு எடுத்துச் சொல்லும்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT