நிவின் பாலி
நிவின் பாலி 
வெள்ளித்திரை

நிவின் பாலியின் "படவீடு" (மலையாளம் ) !

ராகவ்குமார்

அரசியல்வாதிகள் அரசியல் செய்ய சாதாரண மக்களை எப்படியெல்லாம் பகடைகாயாக பயன் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லும் படம் படவீடு. லிஜு கிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷாமி திலகன் நடித்துள்ளார்கள்.

மல்லூர் என்ற ஊரில் விளையாட்டு வீரரான ரவி (நிவின் பாலி) ஒரு விபத்தில் சிக்கியாதால் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில் இருக்கிறார். புதிதாக வளர வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதி குயாலி (ஷாமி திலகன் ) மல்லூர் மக்களுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் வீடு கட்டி கொடுத்து ஈர்க்க முயல்கிறார்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் ரவியின் வீட்டை புனரமைக்கிறார். ரவிக்கு இது பிடிக்கவில்லை. ரவி ஒரு சோம்பேறி. வேலைக்கு செல்லாதவன் என்றெல்லாம் ஊர் மக்களும், எதிர் கட்சியினரும் இகழ்கிறார்கள்.

படவீடு

இந்த கோபத்தில் அரசியல்வாதி குயாலி தன் வீட்டின் முன் வைத்திருந்த விளம்பர கல்வெட்டை அடித்து உடைத்து விடுகிறார் ரவி. இந்த பிரச்சனை மிக பெரிய பகையாக ரவிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே மாறுகிறது.

அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களை சமகால அரசியல்களத்தில் சொல்லியிருக்கிறார் லிஜு. திரைக்கதை வேகமாக நகராவிட்டாலும் காட்சிப்படுத்திய விதம் நம்மை ஈரக்கிறது. இலவசம் என்ற பெயரில் அரசும் அரசியல்வாதிகளும் செய்யும் கயமைகளை இப்படம் நன்றாக சொல்லியுள்ளது.

ஊரின் முன் அசிங்கப்படுவது, துன்பத்திலிருந்து மீண்டு நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது என குறைவான வசனங்களில் மிக சிறந்த நடிப்பை தந்துள்ளார் நிவின். வேலையில்லாத நபராக நடிக்க முன் தொப்பையுடன் திரையில் வந்ததற்கு நிவினுக்கு சபாஷ் போடலாம்.அத்தையாக வரும் ரம்யா சுரேஷ் நாம் அன்றாடம் சந்திக்கும் பெண்ணை போல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நிவின் பாலி

அரசியல்வாதி ஷாமி திலகன் உதட்டில் சிரிப்பும் பார்வையில் விஷமுமாக வேறொரு பரிணாமத்தில் நடிப்பை தந்துள்ளார். சில இடங்களில் தனது தந்தை திலகனை நினைவு படுத்துகிறார்.அதிதி பாலன் அமைதியாக வந்து போகிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசையும், தீபக்.D. மேனன் ஒளிப் பதிவும் சேர்ந்து ஒரு காட்சிகளின் மேஜிக்கை (visuval mgic ) தந்திருக்கிறது. இலவசங்களுக்கு பின் மிக பெரிய அரசியல் சதுரங்கம் இருப்பதை டைரக்டர் தெளிவாக புரியவைத்துள்ளார்.

நில உடமை அரசியலை ஒரு வீட்டை வைத்து சொல்லியுள்ளார். "வீடு நமது, நிலம் நமது, தேசம் நமது" என்று படம் இறுதியில் சொல்லப்படும் வசனங்கள், படம் முடிந்து பல மணிநேரம் நம் மனதில் நிற்கிறது.

படவீடு -சேட்டன்களின் போர்க்கொடி.

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

SCROLL FOR NEXT