Lover movie
Lover movie 
வெள்ளித்திரை

லவ்வர் திரைப்படம் குறித்து செல்வராகவனின் ட்வீட்!

கண்மணி தங்கராஜ்

பிப்ரவரி 9ம் தேதி நடிகர் மணிகண்டன் நடிப்பில் திரையில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் லவ்வர். ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ள இந்த படத்தை பார்த்த இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மனமுருகி பாராட்டியுள்ளார்.

மணிகண்டனின் லவ்வர்:

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன். தனது இயல்பான நடிப்பாலும் பேச்சாலும் தமிழ் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தேர்வு செய்து நடிக்கும் ஒவ்வொரு கதையுமே தனித்துவம் பெற்றவையாகவும், எளிய மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது. இவருடைய சில்லு கருப்பட்டி, ஜெய் பீம் மற்றும் குட் நைட் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்கள் சார்ந்தும் அன்பு மிகுதியால் ஏற்படும் சர்ச்சைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த கதை. அதிலும் காதலர் தினத்தை ஒட்டி திரைப்படம் வெளியானதால், இது காதலர்களால் பெரிதும் ரசித்துப் பார்க்கப்பட்டது. திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.3

கோடி அளவு வசூலை பெற்று மாஸ் காட்டியுள்ளது.

செல்வராகவன் பாராட்டு:

‘லவ்வர்’ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படம் குறித்து பாராட்டியுள்ளார். அதில் “Loved it” இந்த தலைமுறையின் காதலை பற்றி நன்றாக காட்டி இருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு ரியலிஸ்ட்டிக்காக இருந்தது. நடிகர் மணிகண்டன் மற்றும் கதாநாயகி ஸ்ரீ கௌரி பிரியா, இயக்குனர் பிரபுராம் வியாஸ் ஆகியோரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்த செல்வராகவனே தற்பொழுது லவ்வர் படத்தை பாராட்டி இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு மணிகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT