சியான் 62
சியான் 62 
வெள்ளித்திரை

சியான் 62 படத்தில் கமிட்டான அட்டகாசமான நடிகர்.. மாஸ் கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு!

விஜி

நடிகர் விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் இணைந்துள்ள மாஸ் நடிகரால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தங்கலான் படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தனது 62வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை சித்தா படத்தை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்றப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண்குமார்.

முதல் முறையாக இவர் நடிகர் விக்ரமுடன் இணைகிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்தப் படம் குறித்தான அறிவிப்பு வீடியோவில், லுங்கி கட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து அதிரடியாக நடிகர் விக்ரம் வரும்படியான கிளிம்ப்ஸ் விக்ரமின் தில், தூள் காலக்கட்டத்தை நினைவுப்படுத்தியது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், சியான் 62 படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விக்ரமும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா, சித்தா போன்ற ராக்கிங் புராஜெக்ட் கொடுத்த அருண்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி. அருண் இந்தக் கதையை சொல்லியவுடன் நிச்சயம் இது என்னுடைய இன்னொரு வெற்றிப் படம் என்ற நம்பிக்கை வந்தது. எல்லோருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் விக்ரம் நடிப்பில் மிரட்டுவார் என்பது அனைவருக்கும் தெரியும். எஸ்.ஜே சூர்யாவும் தற்போது தனது நடிப்பு அரக்கனை களமிறக்கி வருகிறார். இருவரின் கூட்டணியில் படம் வருவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

SCROLL FOR NEXT